நான் எந்த கட்சியிலும் சேரவில்லை, வதந்திகளை நம்பாதீர்: ட்விட்டரில் குஷ்பு விளாசல்
சென்னை: தான் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சேரவில்லை என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
திமுகவில் சேர்ந்த குஷ்பு பிரச்சார பீரங்கியாக செயல்பட்டார். சொந்த கட்சயினராலேயே செருப்பு வீசப்பட்டு, வீடு தாக்கப்பட்டு மனமுடைந்தார் அவர். மேலும் தான் கட்சிக்காக பாடுபட்ட போதிலும் ஒதுக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். இதையடுத்து அவர் திமுகவில் இருந்து வெளியேறினார்.
Wow..sum prove 2 b absolutely jobless n dumb yet agn..i m not joining any political party..news making rounds r baseless..pls dnt pay heed.
— khushbusundar (@khushsundar) November 24, 2014 அதன் பிறகு அவர் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சேராமல் சினிமாவில் முழு கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் அவரை தங்களின் கட்சியில் சேர்க்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளன. இந்நிலையில் குஷ்பு பாஜகவில் சேரப் போவதாக செய்திகள் வெளியாகின.
இதை பார்த்த குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
வாவ். சிலர் வேலையில்லாதவர்கள் என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளனர். நான் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சேரவில்லை. அவ்வாறு வரும் செய்திகள் ஆதாரம் அற்றவை. தயவு செய்து அதை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications