என்ன பொசுக்குன்னு தமிழிசையை பற்றி இப்படி சொல்லிட்டாரு தினகரன்!
Recommended Video

பெங்களூர்: தமிழிசை யார்.. அவர் யார் என்றே எனக்குத் தெரியாது என்று டிடிவி தினகரன் இன்று பேட்டியளித்தார்.
பெங்களூரில் சிறையில் உள்ள சசிகலாவை, இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து பேசினார். இதன்பிறகு நிருபர்களிடம் தினகரன் பேட்டியளித்தார்.

அப்போது, பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது, எங்கள் கொள்கை மதசார்பின்மை. மத நல்லிணக்கத்தை விரும்பும் கட்சி நாங்கள். ஜாதி மத வேறுபாடு இல்லாத கட்சி நாங்கள். எனவே அவர்கள் கொள்கைகள் எங்களுக்கு ஒத்துவராது.
நான் தமிழிசையை நேரில் பார்த்ததே கிடையாது. தொலைக்காட்சியில்தான் பார்த்துள்ளேன். நான் 1999ம் ஆண்டு எம்.பியாக இருந்தபோது, பொன்.ராதாகிருஷ்ணனை பார்த்துள்ளேன். சி.பி.ராதாகிருஷ்ணனை கூட பார்த்துள்ளேன். இப்போதுள்ள பாஜக தலைவர்கள் யாரையும் பார்த்தது இல்லை. திமுகவுடன் சேருவதற்குப் பேசாமல் அரசியலை விட்டுப் போய் விடலாம்.
எங்கள் குடும்பத்தை பற்றி பன்னீர் செல்வம் தப்பாக பேசியவர்தான். இருந்தாலும், அவராக மன்னிப்பு கேட்டு வந்ததால் பேசினேன். ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் சேருவது என்பது தற்கொலை முடிவு. இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.
பாஜகவுடன் கூட்டணி வைக்க தினகரன், தூதுவிட்டார் என தமிழிசை இன்று பேட்டியொன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications