சாதி மத அரசியலுக்கு அப்பாற்பட்டு ஆன்மிக அரசியலை முன்னெடுப்பேன்.. ரஜினிகாந்த் அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அரசியலுக்கு வருவது உறுதி... ரஜினியின் பரபரப்பு பேச்சு

  சென்னை: சாதி மத அரசியலுக்கு அப்பாற்பட்டு ஆன்மீக அரசியலை முன்னெடுப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

  சாதி மத அரசியலுக்கு அப்பாற்பட்டு ஆன்மீக அரசியலை முன்னெடுப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

  I will be leading a Devotional politics: Rajinikanth

  ரசிகர்களின் 25 ஆண்டுகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தனது அரசியல் அறிவிப்பை இன்று வெளியிட்டிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

  தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறிய நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குவேன் என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

  மேலும் வரும் சட்டசபை தேர்தலில் தனதுக்கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். வரும் சட்டசபை தேர்தல் ஜனநாயகப் போரில் நமது படையும் இருக்கும் என்றும் ரஜினி அறிவித்துள்ளார்.

  காலம் குறைவாக இருப்பதாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

  சட்டசபை தேர்தல் வரும் முன்பு சரியான நேரத்தில் கட்சியை தொடங்குவேன் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சாதி மதத்துக்கு அப்பாற்பட்டு ஆன்மீக அரசியலை முன்னெடுப்பேன் என்றும் ரஜினி தெரிவித்துள்ளார்.

  மேலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் 3 ஆண்டுகளில் பதவியை ராஜினா செய்து விடுவேன் ரஜினி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு கிராமங்களிலும் தெருக்களிலும் நமது மன்றம் இருக்க வேண்டும் என்றும் ரஜினி தனது ரசிகர்களுக்கு கட்டளையிட்டுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rajinikanth says he will be leading a Devotional politics. He also said if he can not fullfill the promisses he will resigning his post.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற