ஜெயலலிதாவால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான்தான்.. விடுவேனா.. விஜயகாந்த் உறுமல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான்தான். எனவே கண்டிப்பாக அவரை எதிர்த்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

பாஜக கூட்டணியில் இணைந்த கையோடு நேற்று செய்தியார்களிடம் பேசினார் விஜயகாந்த்.

அப்போது பாஜக கூட்டணியில் இணைந்தது தொடர்பாகவும், அதிமுகவுக்கு எதிரான பிரசாரம் தொடர்பாகவும் அவர் பேசினார்.

விஜயகாந்த் பேட்டியிலிருந்து....

மக்கள் நலனுக்காக

மக்கள் நலனுக்காக

பாமக இடம் பெற்றுள்ள கூட்டணியில் நாங்கள் இடம் பெற்றுள்ளதற்குக் காரணம், மக்கள் நலனுக்காகவே. அதற்காகத்தான் சேர்ந்துள்ளோம்.

அதிமுகவுக்கு எதிராக

அதிமுகவுக்கு எதிராக

பேட்டியின்போது அதிமுகவுக்கு எதிராக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடுவீர்களா என்று கேட்கப்பட்டது.

அதிகம் பாதிக்கப்பட்டவன் நான்தான்

அதிகம் பாதிக்கப்பட்டவன் நான்தான்

முதல்வர் ஜெயலலிதாவால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான்தான். எனவே கண்டிப்பாக அவருக்கு எதிராக பிரசாரம் செய்வேன் என்று வேகமாக கூறினார் விஜயகாந்த்.

14 தொகுதிகளில்

14 தொகுதிகளில்

பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விஜயகாந்த் கட்சி 14 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சி ஆரம்பித்த பின்னர் 2வது கூட்டணி

கட்சி ஆரம்பித்த பின்னர் 2வது கூட்டணி

விஜயகாந்த் கட்சிக்கு இது 2வது கூட்டணியாகும். கட்சி ஆரம்பித்த பின்னர் தனியாகவே போட்டியிட்டு டெபாசிட் இழந்து வந்த தேமுதிக, முதல் முறையாக கடந்த சட்டசபைத் தேர்தலின்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஒரு அந்தஸ்தைப் பெற்றது. தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+