இரட்டை இலை சின்னத்துடன் நாளை வேட்புமனு தாக்கல் செய்வேன்... தினகரன் உற்சாகம்
இரட்டை இலை சின்னத்தில் நாளை வேட்புமனு தாக்கல் செய்வேன் என்று ஆர்.கே. நகர் சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
சென்னை: இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் எங்களுக்கே ஒதுக்கும் என்பதால் ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நாளை வேட்புமனுதாக்கல் செய்யவுள்ளேன் என்று டிடிவி தினகரன் தெ்ரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 6 முனை போட்டிகள் நிலவி வருகின்றன. மக்களின் ஆதரவு யாருக்கு என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக இது பார்க்கப்படுகிறது.

இதில் சசிகலா அணி சார்பில் தினகரனும், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்கிற பஞ்சாயத்து நடைபெற்று வருவதால் இவர்கள் இருவரும் இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
தேர்தல் ஆணையத்தில் முறையீடு
உண்மையான அதிமுக தாங்களே என்றும் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே என்றும் சசிகலா தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையரிடம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பான முடிவு இன்றோ அல்லது நாளையோ அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
ஜெ.சமாதியில் தினகரன்
இந்நிலையில் ஜெயலலிதாவின் சமாதியில் ஆசி பெற டிடிவி தினகரன் வந்தார்.அப்போது செய்தியாளர்களிடையே அவர் கூறுகையில், உண்மையான அதிமுகவாகிய எங்களுக்கே அச்சின்னம் ஒதுக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
வேட்புமனு தாக்கல்
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளாகும். எனவே இரட்டை இலை சின்னத்துடன் நாளை வேட்புமனு தாக்கல் செய்வேன் என்றார் அவர். அவருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, பெஞ்சமின், சரோஜா, நிலோபர் கபில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications