எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மாட்டேன்.. டிடிவி தினகரன் திட்டவட்டம்!
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மாட்டேன் என அமமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
நாகை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மாட்டேன் என அமமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50ம் ஆண்டு பொன் விழா சென்னை வைஎம்சிஏ மைதானத்தில் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தலைவர் தனபால் தலைமை வகிக்கும் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் உருவப்படத்தை திறந்து வைத்து நூற்றாண்டு விழா மலரையும் வெளியிடுகிறார்.
[யாரை லஞ்ச ஆட்சி என்கிறீர்கள்? அரசை விமர்சித்தால் நாக்கை அறுப்பேன்.. அமைச்சர் சர்ச்சை பேச்சு! ]
எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் வாழ்த்துரை வழங்குபவர்கள் பட்டியலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

அவசியம் இல்லை
இந்நிலையில் அமமுக கட்சியின் துணை பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் நாகையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழில் பெயர் இருப்பதால் விழாவில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை என அவர் கூறினார்.

அதைவிட பாவம் இல்லை
அழைப்பிதழில் பெயர் சேர்த்திருப்பது அரசியல் செய்வதற்காகவே. அதிமுக அமைச்சர்களை அமமுகவில் சேர்த்தால் அதைவிட பாவம் ஒன்றும் இல்லை. 33 அமைச்சர்களை சேர்ப்பதற்கு பதில் அரசியலை விட்டு போய்விடலாம்.

டெபாசிட் வாங்காது
திருவாரூர் இடைத்தேர்தலில் எங்கள் வேட்பாளரை எதிர்த்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிட்டு டெபாசிட் வாங்க முடியுமா? அதிமுக திருப்பரங்குன்றத்திலும் திருவாரூரிலும் டெபாசிட் வாங்காது.

எங்கள் தொண்டரை ஜெயிக்கட்டும்
திமுக,காங்கிரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் என அதிமுக கூறிக்கொண்டு என்னைப் பற்றிதான் அத்தனை மேடைகளிலும் பேசினார்கள். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அமமுக தொண்டர் ஒருவரை ஜெயிக்கட்டும் பிறகு என்னை பார்க்கலாம்.

இடைத்தேர்தலில் ஜெயிக்கட்டும்
அதிமுக திமுக முடிந்தால் இடைத்தேர்தலில் எங்களை ஜெயித்து பார்க்கட்டும். அதிமுக திருவாரூரில் டெபாசிட் வாங்காது. திருப்பரங்குன்றத்திலும் டெபாசிட் வாங்க விடமாட்டோம்.

வீரர் போன்று பேசுகிறார்
அதிமுகவை 33 அமைச்சர்களும் டெண்டர் கம்பெனி போல் நடத்துகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி தனது கோழை தனத்தை மறைக்கவே வீரர் போன்று பேசுகிறார். இவ்வாறு டிடிவி தினகரன் பேசியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications