ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவேன் - அதிமுக எம்எல்ஏக்களிடம் சசிகலா பேச்சு
சென்னை அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டசபைக் குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் முதல்வராக உள்ள சசிகலா, ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவேன் என தெ
சென்னை: சென்னையில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எம்எல்ஏக்களுக்கு நன்றி தெரிவித்த அவர் ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவேன் எனக்கூறியுள்ளார்.
கடந்த டிசம்பர் 5ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக அவரது தோழி சசிகலா பதவியேற்றார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலா அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அதிமுக தலைமைக் கழகத்துக்கு பச்சைப் புடவையில் வந்த சசிகலா எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எழுதி வைத்திருந்ததை படித்தார்.
அப்போது சட்டசபைக் குழு தலைவராக தேர்வு செய்ததற்கு எம்எல்ஏக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது, அதிமுக பொதுச்செயலாளராகவும் முதல்வராகவும் பதவியேற்க தன்னை முதன்முதலில் வலியுறுத்தியது ஓ.பன்னீர்செல்வம் தான்.
அனைவரின் வேண்டுகோளையும் ஏற்றுதான் அடுத்த முதல்வராக பதவியேற்க உள்ளேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றுவேன். ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவேன். இவ்வாறு சசிகலா பேசினார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications