ராஜேந்திர பாலாஜி அமைச்சர் பதவிக்கே தகுதி இல்லாதவர்.. வைகைசெல்வன் கடும் தாக்கு
ராஜேந்திர பாலாஜி அமைச்சர் பதவிக்கே தகுதி இல்லாதவர் என்று வைகை செல்வன் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை: என் மீது அவதூறு பரப்பியதால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக அதிமுக அம்மா அணியின் செய்தி தொடர்பாளர்
வைகைசெல்வன் கூறியுள்ளார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், அதிமுக அம்மா அணியின் செய்தி தொடர்பாளர் வைகை செல்வனுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

வைகைச் செல்வனை, ரூ500க்கு பேசும் கூலிப் பேச்சாளர் என சாடியிருந்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இதற்கு பதிலடி கொடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டார் வைகைச் செல்வன். அதில், சினிமா போஸ்டர் ஒட்டுவதற்காக தூக்கிய பசை வாளியை கீழே வைக்காமல் வலம் வந்தவர்தான் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலடியாக இன்று செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, வைகை செல்வன் ஒரு அழுகிய தக்காளி, அது சாப்பிடவும் உதவாது, சாம்பாருக்கும் உதவாது என்று காட்டமாக கூறினார்.
இந்நிலையில் தம் மீது அவதூறு பரப்பியதால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக வைகை செல்வன் கூறியுள்ளார். மேலும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பொறுப்புடன் செயல்பட வேண்டும். தனியார் பாலில் கலப்படம் இருப்பது உண்மை என்றால் அதை நிரூபிக்க வேண்டியது அமைச்சரின் பொறுப்பு.
இருவருக்கும் இடையேயான வார்த்தை போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications