நான் 'கேப்டனை' விட்டுப் போகவே மாட்டேன்.. திருப்பரங்குன்றம் ஏ.கே.டி. ராஜா

தேமுதிக எம்.எல்.ஏக்களில் 7 பேர் ஏற்கெனவே அதிமுகவுக்கு ஆதரவாக மாறி விட்டனர். அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அரசியலை விட்டே போய் விட்டார். எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்து விட்டார்.
இதனால் தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது. இந்த நிலையில், மேலும் 3 எம்.எல்.ஏக்கள் அதிமுகவுக்கு ஆதரவாக வரப் போவதாக ஒரு பரபரப்புச் செய்தி கிளம்பியுள்ளது. காரணம், இந்த மூன்று பேரும் தேமுதிக செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதால்.
இவர்களில் திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ ஏ.கே.டி. ராஜா இந்த செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
இதுபோன்ற தகவல்களை ஏற்கனவே பலமுறை பரப்பியுள்ளனர். சென்னையில் நடந்த தே.மு. தி.க. செயற்குழு கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். தலைவர் விஜயகாந்தின் மகன் திரைப்பட தொடக்க விழாவிலும் கலந்து கொண்டுள்ளேன்.
நான் ஆரம்ப காலத்தில் இருந்தே தலைவரின் ரசிகன். நான் எந்த சூழ்நிலையிலும் விஜயகாந்தைவிட்டு பிரிய மாட்டேன். தே.மு.தி.க.வில் இருந்து விலகி விடுவேன் என்றும், அ.தி.மு.க. பக்கம் சென்றுவிடுவேன் என்றும் வேண்டுமென்றே சிலர் பொய்யான தகவல்களை பரப்பி எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றார் ராஜா.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications