”அப்பாவின் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்யமாட்டேன்” - அழகிரி பேட்டி
சென்னை: தி.மு.க.வை எதிர்த்து பிரசாரம் செய்யமாட்டேன் என கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி பேட்டி அளித்துள்ளார்.
சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல் பொழிச்சலூர் மெயின் ரோட்டில் வசிப்பவர் பம்மல் நல்லதம்பி . இவர் தாம்பரம் தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். இவர் நீரிழிவு நோய் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதுபற்றி மு.க.அழகிரிக்கு தெரிய வந்தது. இந்த நிலையில் மு.க.அழகிரி நேற்று காரில் பம்மல் நல்லதம்பி வீட்டுக்கு சென்றார். அவரை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அவர் சிகிச்சை பெறும் விவரங்களை குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார். பின்னர் வெளியே வந்த மு.க.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்

கேள்வி - காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் சேருவதற்கான சூழ்நிலை நிலவுகிறதே?
அழகிரி - நான் இப்போது தி.மு.க.வில் இல்லை.
கேள்வி - நாடாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிராக பிரசாரம் செய்வீர்களா?
அழகிரி - இல்லை.
கேள்வி - பம்மல் நல்லதம்பியை திடீரென சந்திக்க காரணம் என்ன?
அழகிரி - "எனது சின்ன வயதில் இருந்தே அவரைப் பற்றி தெரியும். அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக 4 நாட்களுக்கு முன்புதான் எனக்கு தெரியும். எனவே அவரை பார்த்து உடல் நலம் விசாரிக்க வந்தேன்"
கேள்வி - புதிய கட்சி தொடங்குவீர்களா?
அழகிரி -"இல்லை"
கேள்வி - நீங்கள் புதிய கட்சி தொடங்க வேண்டும் என்று உங்கள் ஆதரவாளர்கள் எதிர்பார்க்கிறார்களே?
அழகிரி - "ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து விட்டு 2 மாதங்களுக்கு பின்பு முடிவு எடுப்பேன்"இவ்வாறு அவர் கூறினார்.
மு.க.ஆழகிரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பம்மல் நகர தி.மு.க. செயலாளர் வெ.கருணாநிதி தலைமையில் 100 பேர் பொழிச்சலூர் மெயின் ரோட்டில் சாலையோரம் நின்று கோஷம் எழுப்பினார்கள். ஆனால் பம்மல் நல்ல தம்பி வீடு அருகே மு.க. அழகிரி கார் வந்ததும் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications