தினகரன் ஜெயிலுக்குப் போனால் தற்கொலை செய்வேன் -நாஞ்சில் சம்பத் ஆவேசத்தால் எம்.எல்.ஏக்கள் ஷாக்
தினகரன் சிறைக்குப் போனால் தற்கொலை செய்து கொள்வேன் என நாஞ்சில் சம்பத் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரன் சிறைக்குப் போக நேர்ந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என நாஞ்சில் சம்பத் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா, தினகரனின் படுதீவிர ஆதரவாளராக உருமாறியிருக்கிறார் நாஞ்சில் சம்பத். தினகரனை புனிதர் என்று ஓயாமல் புகழ்ந்து தள்ளி வருகிறார்.

அத்துடன் ஓபிஎஸ் வீட்டு வாசலில் தாம் நிற்க நேர்ந்தால் அப்போதே தற்கொலை செய்து கொண்டு செத்து போய்விடுவேன் எனவும் ஒரு பேட்டியளித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார் நாஞ்சில் சம்பத். இந்த நிலையில் தினகரன் கைது செய்யப்பட்டது முதலே கொந்தளித்துக் கொண்டிருக்கிறார் நாஞ்சில் சம்பத்.
இது தொடர்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் நாஞ்சில் சம்பத் ஆலோசனை நடத்தியிருக்கிறார். தற்போது தினகரன் போலீஸ் கஸ்டடியில் உள்ள நிலையில் அவருக்கு ஜாமீன் வாங்கிவிடலாம் என்பது அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களின் நம்பிக்கை.
இந்த ஆலோசனையின் போது உணர்ச்சிவசப்பட நாஞ்சில் சம்பத், தினகரன் மட்டும் சிறைக்குப் போக நேர்ந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறியிருக்கிறார். அவரது இந்த பேச்சைக் கேட்டு தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏக்கள் அதிர்ந்து போனார்களாம்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications