பேரவை தொடங்கினாலும் கவலை இல்லை.. கட்சியாக மாற்றி விடுவோம்.. ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: போயஸ் தோட்டத்தில் இன்று ரஜினி தன் நிலைப்பாட்டை அறிவிப்பதாக கூறிய நிலையில், அங்கு குவிந்துள்ள ரசிகர்கள் பேரவையாக அறிவித்தாலும் பரவாயில்லை அதனை கட்சியாக மாற்றி விடுவோம் என தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசியல் அடுத்தடுத்து பரபரப்பு கட்டங்களை எட்டிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று அறிவிப்பதாக கூறியிருந்தார். ரசிகர்கள் மத்தியில் அந்த எதிர்ப்பார்ப்பு மிக்க அறிவிப்பு வெளியாகும் என்பதால் கட்சிகளும், மீடியாக்களும், ரசிகர்களும் பரபரப்பில் உள்ளன.

If he starts the peravai also we will convert it in to party soon, says rajini fans

இந்நிலையில் ராகவேந்திரா மண்டபத்தில் கூடியிருந்த ரசிகர்கள், ரஜினிகாந்த் தற்போது பேரவை அல்லது இயக்கத்தை அறிவிக்கவுள்ளதாகவும் அதனை தாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வோம் என்றும் தெரிவித்தனர்.

மேலும் அவர் பேரவையாக அறிவித்தாலும், விரைவில் அதனை தாங்கள் கட்சியாக மாற்றி மக்கள் ஆட்சி மலர வழிவகை செய்வோம் என்றும் கூறியிருந்தனர். இந்நிலையில் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு மட்டும் தன்னுடைய முடிவை முன்பே கூறி விட்டாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

தனது பேரவை முடிவை கேட்டு ரசிகர்கள் அதிருப்தி அடைந்து பிரச்சனையில் ஈடுபடக்கூடாது என்பதற்காக அவர் முன்னெச்சரிக்கையாக இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

எந்த முடிவாக இருந்தாலும் இன்னும் சில நிமிடங்களில் தெரியவந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
If he starts the peravai also we will convert it in to party soon, says rajini fans. And all so they added that, rajini only can give good government.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற