பாஜகவுக்கு நடிகை குஷ்பு வந்தால் வரவேற்போம்: வானதி சீனிவாசன்
ஆம்பூர்: திமுகவில் இருந்து விலகிய நடிகை குஷ்பு பாரதிய ஜனதா கட்சிக்கு வந்தால் வரவேற்போம் என்று அக்கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலர் எஸ். வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ஆம்பூரில் நேற்று இரவு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தென்னாசியாவுக்கு தலைமை வகிக்கும் தகுதி இந்தியாவுக்கு உள்ளது என்பதை பூடான் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியபோது சூசகமாக தெரிவித்துள்ளார். அந்த அளவுக்கு இந்தியாவை பலம்மிக்க நாடாக அவர் கண்டிப்பாக உருவாக்குவார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை நடைமுறைபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். காவிரி பிரச்சனையில் மத்திய அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இலங்கையில் வாழும் தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதை உறுதிபடுத்தும் நடவடிக்கைகளையும், அவர்களின் பிரச்சனைக்கும் தீர்வு காண மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைகளை இந்தியா தடுக்கும்.
மீனவர்கள் கைது செய்யப்பட்டாலும், இலங்கை அரசால் உடனடியாக விடுவிக்கப்படுகின்றனர். அந்த அளவுக்கு மத்திய அரசின் செயல்பாடுகள் உள்ளது.
நடிகை குஷ்பு திமுகவிலிருந்து விலகியது அவரது சொந்த விருப்பம். அவர் பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம். யார் பாஜகவுக்கு வந்தாலும் வரவேற்போம்.
இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications