கட்டி முடிக்கப்பட்ட அரசு கட்டடங்களை திறக்கலன்னா என்கிட்ட சொல்லுங்க.. அன்புமணி அதிரடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தருமபுரி: கட்டி முடிக்கப்பட்ட அரசு கட்டடங்களை திறக்காவிட்டால் எனக்கு தெரியப்படுத்துங்கள் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

பாமக இளைஞரணித் தலைவரான அன்புமணி ராமதாஸ் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அவ்வப்போது தனது தொகுதி மக்களை சந்தித்து வரும் அவர் மக்களிடம் கோரிக்கைகளையும் கேட்டு வருகிறார்.

If the govt building is not open after finishing construction work inform me: Anbumani

இந்நிலையில் தருமபுரியில் கட்டிமுடித்த அரசு கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு வராமல் இருந்தால் உடனடியாக கீழ் உள்ள மின்னஞ்சலுக்கோ, தொலைபேசி எண்ணுக்கோ தெரியப்படுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.

ஒரே வாரத்திற்குள் நான் திறக்க ஏற்பாடு செய்வேன் என அன்புமணி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் அவர் வெளியிட்டுள்ளார்.
மின்னஞ்சல் : mpofficedharmapuri@gmail.com
தொலைபேசி : 9444304342 & 04342 270001

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dharumapuri MP Anbumani Ramadoss says that if the govt building is not open after finishing consturction work inform me. He has given phone number and e mail id to public for complaint.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற