நாமக்கல்லில் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்த தந்தையை அடித்துக் கொன்ற மகன்
நாமக்கல்: நாமக்கல்லில் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த தந்தையை மகன் அடித்துக் கொலை செய்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள மேல்க்கனிநாடு புதுவளவைச் சேர்ந்தவர் விவசாயியான தங்கராசு(52). அவரின் மனைவி 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தங்கராசுவின் மகன் அசோகன்(32). நாமக்கல்லில் டாரஸ் லாரி டிரைவராக உள்ளார். அவருக்கும் ரேவதி(22) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணமானதில் இருந்து அசோகன் தனது மனைவியுடன் தந்தை இருக்கும் வீட்டிலேயே வசித்து வந்தார். அசோகனுக்கு மனோபாலா(5), துளசிபாலா(4) என 2 மகன்கள் உள்ளனர். அசோகன் லாரி டிரைவர் என்பதால் வாரக் கணக்கில் சில சமயம் ஒரு மாதம் கூட வெளியூருக்கு சென்றுவிடுவார்.
இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி தங்கராசுவும், ரேவதியும் கள்ளத்தொடர்பு வைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது குறித்து அறிந்த ஊர்க்காரர்கள் மற்றும் உறவினர்கள் அசோகனிடம் தெரிவித்தனர்.
அசோகன் மனைவியையும், தந்தையையும் கண்டித்தும் அவர்கள் கேட்கவில்லை. இந்நிலையில் அசோகன் தான் கொல்கத்தாவுக்கு செல்வதாக கூறிவிட்டு நேற்று கிளம்பினார். திடீர் என வீட்டிற்கு திரும்பி வந்த அவர் தனது தந்தையும், மனைவியும் உல்லாசமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அசோகன் வீட்டில் இருந்த உருட்டுக்கட்டையால் தந்தையின் தலையில் அடித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தங்கராசுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அசோகன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு போலீசாரிடம் சரணடைந்தார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications