Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘ஸ்டாலின் அங்கிள்’.. சிறுமியின் சத்தம் முதல்வரின் காதில் விழாவிட்டாலும் நிறைவேறியது கோரிக்கை.. வாவ்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி : "ஸ்டாலின் அங்கிள்.. என்னை படிக்க வைங்க" என திருச்சி ஏர்ப்போர்ட்டில் சத்தம் போட்ட சிறுமி காவ்யாவின் கோரிக்கையை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததோடு, போனஸாக வீடு வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். அவர் நேற்று முன்தினம் திருச்சி விமான நிலையம் வந்து இறங்கிய போது, அங்கு பொதுமக்கள் பகுதியில் நின்றிருந்த 7 வயது சிறுமி திடீரென 'ஸ்டாலின் அங்கிள், என்னை படிக்க வையுங்கள்' என்று சத்தம் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Immediate action: Collector recommends to allocate house for the girl who asked CM Stalin for help

ஆனால், முதல்வர் ஸ்டாலின் வருகையின்போது கட்சிக்காரர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், அந்தச் சிறுமியின் குரல் முதலமைச்சரின் காதுகளை எட்டவில்லை. மு.க.ஸ்டாலின் அந்த இடத்தை கடந்து சென்று பின்னர் தஞ்சைக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

இதற்கிடையே சிறுமியின் சத்தம் கேட்டு அங்கு விரைந்து வந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அந்த சிறுமியிடம் விசாரித்தார். அப்போது, தனது குடும்பம் வறுமையால் வாடுவதாகவும், பள்ளிக் கட்டணம் கூட செலுத்த முடியவில்லை எனவும் அந்தச் சிறுமி கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து அவரை படிக்க வைக்க நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உடனடியாக உறுதியளித்தார். இந்நிலையில், அந்தச் சிறுமி மற்றும் அவரது தாயாரை, ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துப் பேசிய திருச்சி கலெக்டர் பிரதீப் குமார், சிறுமியின் குடும்பத்தினருக்கு வீடு வழங்க பரிந்துரை செய்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலினை சத்தம் போட்டு அழைத்து படிக்க உதவி கோரிய அந்தச் சிறுமியின் பெயர் காவ்யா. இவர் கோவை சிங்காநல்லூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வருகிறார். காவ்யாவின் தந்தை திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர். கடந்த 1 வருடத்துக்கு முன்பு அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார்.

தற்போது காவ்யா தனது தாய் கவிதா, சகோதரர் கவின்குமார் ஆகியோருடன் கோவை சிங்காநல்லூரில் வசித்து வருகிறார். தந்தையின் மறைவிற்கு பின்னர் குடும்பம் மிகவும் சிரமத்தில் இருப்பதால் பள்ளி கட்டணம் கூட செலுத்த முடியாமல் தவித்து வந்த நேரத்தில் தான், தாய் கவிதா தனது 2 குழந்தைகளுடன் திருச்சிக்கு வந்து கடந்த ஒருவார காலமாக உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.

இந்த சமயத்தில்தான் முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சிக்கு வருகிறார் என்ற தகவலறிந்து, அவரிடம் உதவி கேட்பதற்கக விமான நிலையத்திற்கு சென்ற காவ்யா குடும்பத்தினர் இரவு 9.30 மணி வரை காத்திருந்துள்ளனர். விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை கண்டதும், சிறுமி காவ்யா தன்னை படிக்க வைக்க நடவடிக்கை எடுக்கும்படி சத்தம் போட்டு தனது கோரிக்கையை வைத்திருக்கிறார்.

காவ்யா குரல் எழுப்பியது, அந்தக் கூட்டத்தில் முதலமைச்சருக்கு கேட்கவில்லை. எனினும், திருச்சி கலெக்டர் இதனைக் கவனித்து விசாரித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வந்தது. இந்நிலையில், கவிதாவை ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்த திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் குறைகளை கேட்டறிந்தார்.

Immediate action: Collector recommends to allocate house for the girl who asked CM Stalin for help

அதைத்தொடர்ந்து, அவர்கள் வசித்து வரும் கோவை மாவட்டத்திலேயே தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் வீடு ஒதுக்க ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார். மேலும், ஆட்சியர் விருப்ப உரிமை நிதி மூலம் கவிதாவின் இரு குழந்தைகளின் கல்வி செலவுக்கு உதவி செய்வதாகவும் உறுதி அளித்துள்ளார்.

அதோடு, இலவச சட்ட உதவி மையம் மூலம், காவ்யாவின் தந்தையின் சொத்து உரிமையை மீட்டுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் கலெக்டர் பிரதீப் குமார், அவர்களிடம் உறுதி அளித்துள்ளார். சிறுமி காவ்யா அழைத்தது முதலமைச்சரின் காதுகளில் விழாவிட்டாலும், அவரது கோரிக்கைகள் நிறைவேறி இருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+