சென்னை அண்ணாசாலையில் மீண்டும் திடீர் விரிசல்... வாகன ஓட்டிகள் பீதி
சென்னை அண்ணாசாலையில் மீண்டும் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் பீதியடைந்துள்ளனர்.
சென்னை: சென்னை அண்ணாசாலையில் மீண்டும் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் பீதியடைந்துள்ளனர். இந்த விரிசல் காரணமாக அவ்வழியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மெட்ரோ சுரங்கப்பாதை பணிகள் நடைபெறும் சென்னை அண்ணாசாலையில் நேற்று முன்தினம் பிற்பகல் திடீரென பெரும் பள்ளம் ஏற்பட்டது. இதில் மாநகர பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் சிக்சிக்கொண்டது.

இந்த பள்ளத்தை சீரமைக்கும் பணிகள் நேற்று தான் முடிவடைந்தது. இந்நிலையில் அதேபகுதியில் ஜெமினி மேம்பாலம் நுழைவு வாயில் அருகே இன்று மீண்டும் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரும் பீதியடைந்தனர். சென்னையின் முக்கிய சாலை மற்றும் காலை நேரம் என்பதால் அப்பகுதியில் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

இந்த திடீர் விரிசல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவ்வழியாக செல்லும் வாகனங்கள் கடற்கரை சாலையில் மாற்றிவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
விரிசல் ஏற்பட்ட பகுதியில் மாநகர காவல்துறையினர், மெட்ரோ சுரங்கப்பாதை ஊழியர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.பொதுமக்கள் யாரும் விரிசல் ஏற்பட்ட பகுதியில் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications