சென்னை மெரீனாவில் இரவு நேரத்தில் துப்பாக்கியுடன் அலைந்த இளைஞர்கள் கைது - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மெரினா கடற்கரை சாலையில் இரவு நேரத்தில் கையில் துப்பாக்கி மற்றும் கத்திகளுடன் அலைந்த மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை மயிலாப்பூரில் போலீசார் இரவு நேர ரோந்துப் பணியில் நேற்று இரவு ஈடுபட்டிருந்தனர். அப்போது, மெரீனா கடற்கரை சாலையில் மூன்று இளைஞர்கள் காரணமின்றி சுற்றித் திரிந்துள்ளனர்.

Three Youngsters Arrested With Guns in Chennai-Oneindia Tamil
In Chennai Mylapore three youngster roamed with knife and gun and they were arrested

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் துப்பாக்கி மற்றும் கத்திகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். அதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். ரவுடியை மிரட்ட சென்ற போது அவர்கள் பிடிபட்டுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகளவிலான கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் பெட்ரோல் குண்டுகளை வீசி வரும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Chennai Mylapore three youngster roamed with knife and gun and they were arrested by police. And inquiry going on.
Please Wait while comments are loading...