கரூரில் சோலார் மின்கம்ப பணியின் போது மின்சாரம் தாக்கி இருவர் பலி - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

கரூர்: சோலார் மின் வயர் இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள மாயனூரில் அம்மா பூங்காவுக்கு மின்கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணியில் உள்ளூரைச் சேர்ந்த அசோக் குமார், கண்ணன் ஆகிய இருவர் செய்து வந்தனர்.

In Karur district Mayanur 2 persons died after electric shock

சம்பவத்தன்று, சோலார் மின் கம்பத்துக்கு மின்சார வயர் இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி இருவரும் அதே இடத்தில் பலியாகினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதும் விரைந்த வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Karur district Mayanur 2 persons died after electric shock when they were in erecting electric post in Amma park.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற