பிரேக்கிங் நியூஸ்.. தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படியெல்லாம் நடக்கும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னையை எச்சரிக்கும் நார்வே வானிலை மையம்- வீடியோ

  சென்னை: தமிழ்நாட்டில் மட்டுமே இதெல்லாம் நடக்கும் என்ற ஒரு டிவிட் கண்ணில் பட்டது. அப்படி என்னதான் தமிழகத்தில் அதிசயமாக நடக்கிறது என்று நினைக்கிறீர்களா.

  கடந்த சில வருடங்களாக நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்த்தால் இந்தகேள்வி உங்களுக்குள்ளும் ஒருமுறையாவது வந்திருக்கும். அப்படி என்னதான் அதிசயம் தமிழகத்தில் நடக்கிறது.

  பிரேக்கிங் செய்திகள். இதுதான் அந்த அதிசயம். எதெற்கெல்லாம் டிவி மீடியாக்கள் பிரேக்கிங் செய்தி போட வேண்டிய நிலை வந்துவிட்டது தெரியுமா?

  பிரேக்கிங்

  இதை பாருங்கள்: https://twitter.com/Green_Tamil/status/926663085393297408

  தமிழ்நாட்டில் மட்டுமே முதல்வர் கோட்டைக்கு போவது, ஆளுநர் மாநிலத்திற்கு வருவது, மழை பெய்வது கூட பிரேக்கிங் நியூசாக்கப்படுகிறது.

  நெட்டிசன் சொல்வது உண்மைதான். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது அன்றாட பணிக்காக கோட்டைக்கு செல்வது கூட பிரேக்கிங் செய்திகளாக காட்டப்பட்டன. பிளெக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டன. அவர் எப்போதாவது கோட்டைக்கு போக ஆரம்பித்த காலகட்டம் அது என்பதால் இவ்வாறு செய்திக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

  ஆளுநரின் பங்கு

  ஆளுநரின் பங்கு

  பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் இருந்தபோது அவர் சென்னைக்கு எப்போதெல்லாம் வருகிறாரோ அப்போதெல்லாம் அது பிரேக்கிங் செய்திதான். ஏனெனில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, புதிய அமைச்சரவை பதவியேற்றபோது, ஆட்சியை கலைக்க எதிர்க்கட்சிகள் படையெடுத்தபோது என அவரது வருகை பிரேக்கிங் செய்யப்பட்டது.

  பருவமழைக்கும் பிரேக்கிங்

  பருவமழைக்கும் பிரேக்கிங்

  மேலும், இப்போது பருவமழை காலத்தில் சென்னையில் மழை பெய்வதும் பிரேக்கிங் செய்தியாகிறது. ஆங்காங்கு நின்றபடி நிருபர்கள் நேரடி ஒளிபரப்பு செய்யும் நிலை உள்ளது. பருவமழையை பேரிடர் என்ற நிலைக்கு நாம் கொண்டு சென்றுவிட்டோம் என்பதே இந்த பிரேக்கிங் செய்திகளுக்கான காரணம்.

  சமூகத்தின் தேவை

  சமூகத்தின் தேவை

  கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் பிரேக்கிங் செய்திகளை சாதாரண விஷயத்திற்கும் போட வேண்டிய நிலைக்கு உருவாகியுள்ளது சமூகம். மீடியாக்களின் போட்டி என்பதைவிட, இதற்கான தேவை சமூகத்தில் நிலவுகிறது என்பதே உண்மை. வெறுமனே மழை பெய்திருந்தால் அது பிரேக்கிங் ஆகியிருக்காது. அது வெள்ளமாக மாறும்போதே பிரேக்கிங் தேவைப்படுகிறது.

  மீடியாக்கள் பொறுப்பில்லை

  மீடியாக்கள் பொறுப்பில்லை

  ஜெயலலிதா தொடர்ந்து கோட்டைக்கு போயிருந்தால் அதற்கு பிரேக்கிங் தேவையில்லை. எப்போதோ போனதால் தேவைப்பட்டது. முந்தைய ஆளுநர்களை போல ராஜ்பவனில் கோப்புகளை மட்டும் பார்வையிட்டுக் கொண்டிருந்தால் வித்யாசாகர் ராவ் பிரேக்கிங் செய்திக்குள் வந்திருக்கமாட்டார். அவர் அரசையே வழிநடத்த வேண்டிய பொறுப்புக்கு ஆளானதால் பிரேக்கிங் செய்தி தேவைப்பட்டது. சமூக மாற்றம் இப்படி இருக்கும்போது, இதற்கு மீடியாக்கள் பொறுப்பாக முடியாதே.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  In Tamilnadu a monsoon rain will become a breaking news as it turn as flood.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற