ஆர்கே நகர் தேர்தல் வன்முறை: ஓபிஎஸ் மகனை கைது செய்ய ஹைகோர்ட் தடை!
ஆர்கே நகர் தேர்தல் வன்முறை தொடர்பாக ஓபிஎஸ் மகன் மற்றும் அவரது தம்பி ராஜாவை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
சென்னை: ஆர்கே நகர் தேர்தல் வன்முறை தொடர்பான வழக்கில் ஓபிஎஸ் மகன் மற்றும் அவரது தம்பி ராஜாவை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக ஆர்கே நகர் காவல் ஆய்வாளர் பதில் அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆர்கே நகர் தொகுதிக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான பிரச்சாரத்தில் அனைத்துக்கட்சிகளும் வேட்பாளர் அறிவிப்புக்குப் பின் தீவிரமாக ஈடுபட்டிருந்தன.

ஆனால் வருமான வரித்துறை ரெய்டின் போது வாக்காளர்களுக்கு டிடிவி.தினகரன் குரூப் பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் சிக்கியதால் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இந்நிலையில் அண்மையில் ஆர்கே நகரில் நடைபெற்ற பிரசாரத்தின் போது ஓபிஎஸ் தரப்புக்கும், டிடிவி.தினகரன் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., மகன் ரவிந்திர நாத், சகோதரர் ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து இருவரும் முன்ஜாமின் கேட்டு சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் ஆர்கே நகர் இன்ஸ்பெக்டர் பதிலளிக்க உத்தரவிட்டு, ஏப்ரல் 13ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications