ஆர்கே நகர் இடைத்தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் டிடிவி தினகரன்?
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இரட்டை இலைச் சின்னத்தை மதுசூதனன் அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இனி இரட்டை இலைச் சின்னத்தையும் அஇஅதிமுக என்ற பெயரையும் மதுசூதனன் அணியினர் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தினகரன் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தினகரன் தரப்பு தெரிவித்துள்ளது.

சசிகலாவுக்கு பின்னடைவு
ஏற்கனவே ஜெயலலிதா மரணத்தில் சசிகலா குடும்பத்தினர் மீது மக்களுக்கு சந்தேகம் உள்ளது. இந்நிலையில் இரட்டை இலை சின்னமும் கட்சியும் நழுவியிருப்பது சசிகலா தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

போட்டியிடவுள்ள டிடிவி
இந்நிலையில் ஆர்கே நகர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார் டிடிவி தினகரன்.

எந்த சின்னத்தில் போட்டியிடுவார்?
இரட்டை இலைச்சின்னம் ஈபிஎஸ் ஓபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் டிடிவி தினகரன் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்று கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் ஆணைய தீர்ப்பை எதிர்த்து தினகரன் உச்சநீதிமன்றத்துக்கு போனாலும் டிசம்பர் மாதத்துக்குள் சாதமாக முடிவு கிடைக்கும் என்பது சாத்தியமில்லை.

தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டது
ஆகையால் தினகரன் சுயேட்சை வேட்பாளரைப் போல் ஏதாவது ஒரு சின்னத்தில் தான் போட்டியிட முடியும். கடந்த முறை ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது அதிமுக கட்சியும் சின்னமும் முடக்கப்பட்டு டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டது.

இரட்டை மின்விளக்கு சின்னமா?
இந்நிலையில் மீண்டும் டிடிவி தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அல்லது ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்ட, பார்ப்பதற்கு இரட்டை இலை போன்று தோன்றிய இரட்டை மின்விளக்கு சின்னத்தில் போட்டியிடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
திரிசங்கு சொர்க்கத்தில் சி.விஜயபாஸ்கர்! கடைசி நேரத்தில் காலைவாரிய திமுக! போக்கு காட்டும் பனையூர்? -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்?











Click it and Unblock the Notifications