தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக்கி துன்புறுத்திய சிங்கள ராணுவத்தினரை கைது செய்க: திருமாவளவன்
தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக்கி துன்புறுத்திய சிங்கள ராணுவத்தினரை கைது செய்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக வைத்திருந்த சிங்கள ராணுவத்தினரைக் கைதுசெய்து தண்டிக்க வேண்டும் என இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்தவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஈழப் போரின் போது ராஜபக்ச ஆட்சியின்போதும் அதன்பின்னர் அமைந்த மைத்ரிபால சிறிசேன அரசின் கீழும் கைதுசெய்யப்பட்ட சரணடைந்த தமிழ்ப் பெண்களை சிங்கள ராணுவத்தினர் பல்வேறு முகாம்களில் அடைத்துவைத்து பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தினர் என்ற அதிர்ச்சியளிக்கும் உண்மை இப்போது வெளியாகியுள்ளது. இந்தக் கொடுங்குற்றத்தைச் செய்த குற்றவாளிகளை தண்டிப்பதற்கு இந்திய அரசு இலங்கையை வலியுறுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

ஐநா அவையின் 'பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றும் குழுவின்' முன்னர் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 'சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின்'சார்பில் 55 பெண்களின் வாக்குமூலங்கள் தொகுக்கப்பட்டு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அவர்களில் நாற்பத்தெட்டு பேர் ராஜபக்ச ஆட்சியின்போது கைது செய்யப்பட்டவர்கள், ஏழு பேர் தற்போது நடைபெறும் சிறிசேனவின் ஆட்சியில் கைதுசெய்யப்பட்டவர்கள்.
வாக்குமூலம் அளித்திருக்கும் 29 பெண்கள் பலவந்தமாக வாகனங்களில் கடத்தப்பட்டு கண்கள் கட்டப்பட்டு அடையாளம் தெரியாத இடங்களில் அடைத்துவைக்கப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பத்து பேர் மறுவாழ்வு முகாம்களிலிருந்து கடத்திச்செல்லப்பட்டுள்ளனர். தம்மை அடைத்துவைத்திருந்தவர்களுக்கு லஞ்சம் கொடுத்தே இந்தப் பெண்கள் தப்பித்து வந்துள்ளனர். இந்தக் கொடுமைகளில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகளின் பெயர், பதவி உள்ளிட்ட விவரங்களும் சாட்சிகளின் வாக்குமூலங்களோடு இணைத்து சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் இந்தக் கொடுமை இனப்படுகொலையைவிட மோசமானது. இப்போதாவது சர்வதேச சமூகமும் ஐநா அவையும் இலங்கை போர்க்குற்றங்களிலும் இனப்படுகொலையிலும் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக வைத்திருந்த சிங்கள ராணுவத்தினரைக் கைதுசெய்து தண்டிக்க வேண்டும் என இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்தவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு திருமாவளவன் அறிக்கையில் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications