இனி நீங்களே “அம்பி”யாக அவதாரம் எடுக்கலாம் – ரயில் சேவை குறைபாடுகளுக்கு ஆன்லைன் புகார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயிலில் பயணம் செய்பவர்கள் தங்களுடைய வசதிக் குறைபாடுகள் குறித்த புகார்களை தெரிவிக்க புதிய வாட்ஸ் அப் மற்றும் ஆன்லைன், எஸ்.எம்.எஸ் புகார் சேவையினை ஆரம்பித்துள்ளது இந்திய ரயில்வே.

ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் சுகாதார குறைபாடு தொடர்பாக பல பிரச்சினைகளை சந்திக்கின்றனர். ரயில் பெட்டி சுத்தமாக இல்லை.

Indian railway introduced whatsapp complaints…

கழிவறை சுத்தமாக இல்லையென்றால் எங்கு சென்று புகார் செய்வது என்ற கேள்விக்குறி எழுகிறது. இதனால் பல பயணிகள் அசவுகரியத்துடனேயே ரயில் பயணத்தை தொடருகிறார்கள்.

இந்த நிலையில் ரயில் பயணிகள் தங்கள் புகார்களை தெரிவிப்பதற்கு வசதியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஆண்ட்ராய்டு மென்பொருள் உள்ள செல்போன் வைத்திருப்பவர்கள் "வாட்ஸ் அப்" மூலமாக புகார்களை தெரிவிக்கலாம். ரயில் பயணத்தின் போது புகார்களை தெரிவிப்பவர்கள் பி.என்.ஆர், வண்டி எண், ரயில் நிலையத்தின் பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் புகார் தெரிவிக்கலாம்.

கோட்டம், மண்டலம் வாரியாக புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். புகார்கள் மட்டுமின்றி ஆலோசனைகளையும் இதன் மூலம் தெரிவிக்கலாம்.

புகார்களை www.coms.indianrailways.gov.in என்ற இணைய தளத்தின் மூலமாக பதிவு செய்யலாம் அல்லது வாட்ஸ்அப் மூலம் புகார்களை அனுப்ப 9717630982 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம். புகார், கருத்துக்களை பரிமாற மண்டல வாரியாக பேஸ்புக் வசதி உள்ளது.

மேலும் எஸ்.எம்.எஸ் மூலமாக புகார் தெரிவிக்க விரும்புபவர்கள் 9717630982 என்ற எண்ணுக்கு தங்களது புகார் அனுப்பலாம். 138 என்ற 24 மணி நேர உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டு குரல் பதிவு மூலம் புகார்களை தெரிவிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+