நிர்பயா கொலைக்கு கொந்தளித்தவர்கள் சுவாதி கொலைக்கு குரல் தரவில்லையே.. தகிக்கும் சோஷியல் மீடியா
சென்னை: சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து நேற்று காலையில் இன்போசிஸ் நிறுவன பெண் ஊழியரான சுவாதி மர்ம நபரால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
டெல்லியில் மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்கள் அவரது பெண்ணுறுப்பை சிதைத்து குரூர வெறியை வெளிப்படுத்தி கொலை செய்தனர். சுவாதி விஷயத்தில், அவரது வாயை குறி வைத்து அரிவாளால் வெட்டி கொடூரமாக கொன்றுள்ளான் கொலையாளி. சுவாதியின் பற்கள் பிளாட்பாரத்தில் சிதறி கிடந்த கோர காட்சியை அங்கு சூழ்ந்திருந்த மக்களால் பார்க்க முடிந்தது.
இதுகுறித்து டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மக்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதுகுறித்து ஒரு பார்வை:
|
கழுத்தைதானே..
இதே ஸ்வாதி வெள்ளத்துல சிக்கிருந்தா நாம போய் சாப்பாடும் போர்வையும் கொடுத்திருப்போம்.ஏதோ கழுத்தறுப்பட்டு தான கீழே கிடந்தாள். #RIPSwathi
|
துணிச்சலுக்கு காரணம்
நமக்கு ஏன் வம்பு என்ற மனநிலை மக்களுக்கு வந்துவிட்டதுதான் பொது இடங்களில் கொலை செய்யும் துணிச்சலை கொலைகாரர்களுக்கு கொடுக்கிறது #nungambakkam

இங்கு ஏன் போராடுவதில்லை
சுவாதி என்ற 24 வயது பெண்ணை கூட்டம் நிறைந்த நுங்கம்பாக்கம் ஸ்டேஷனில் காலை வேளையில் அத்தனை பேர் இருக்கும் போது , ஒருவன் கொன்று விட்டு செல்வான்- அவனை பிடிக்க ஒருவரும் இல்லை.அந்த பெண்ணின் உடல் அங்கு 2 மணி நேரம் இருந்தது. Delhiயில் ஒரு பெண்ணை (நிர்பயா) இறந்த போது அவ்வளவு கூக்குரலிட்டார்கள். இங்கு ஏன் ஒருவரும் அதை பற்றி கவலை படுவதில்லை? நாளை நம் குழந்தைகளும் பாதிக்கப்படலாம் அல்லவா? அரசு குடித்து மடிந்தவர்க்கு இழப்பீடு கொடுத்ததே. ஆனால் இந்த பெண்ணை பற்றி கிணற்றில் போட்ட கல்லாக இருக்கலாமா?. இவ்வாறு ஹேமா ஜம்பு கூறியுள்ளார்.

கேமரா எங்கே
இன்போசிஸ் சுவாதி படுகொலை.. பச்சை டி சர்ட் போட்டிருந்த கொலையாளிக்கு வலைவீச்சு! தொழில் வளர்ச்சியில் முதலிடம் என மார் தட்டும் அம்மாவே.. தலைநகரத்தின் மையப்பகுதி ரயில் நிலையத்தில் கேமரா இல்லையே.. #வேதனை
அநீதி சமூகம்
எங்கு செல்வாய் நீ? அநீதியை ஆதரிக்கும் பலர் வாழும் சமூகம் இது ஆதலால் மரணத்தை ஏற்று கொண்டு அமைதியாய் துயில் கொள்வாய் கல்லறையில்!! #RIPSwathi

திருத்த முடியாத மிருகம்
சுவாதி கொலைக்குற்றவாளியைக் கண்டுபிடித்து அவனுக்கு தண்டனையை வழங்கி அவனை திருத்துவதில் நேரத்தை செலவிடுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. எனில், அவன் ஏற்கனவே ஒரு மிருகமாகி விட்டான். அவனை உடனடியாக "கடுமையாக" நடு ரோட்டில் போலீஸ் "தண்டித்தால் / தீர்ப்பளித்தால் . ", மற்றவர்களுக்கு தப்பு செய்யக் கூடாது என்ற ஒரு பயம் உடனடியாக வரும். SET THE RIGHT EXAMPLE

தட்டி கேட்க தைரியம் இல்லை
ஒருத்தனுக்கு கூடவா டா தைரியம் இல்லை.....எவனாவது ஒருத்தன் வந்து தட்டி கேட்டு இருந்தா கூட ஒரு கூட்டம் சேர்ந்து இருக்கும்.... ஒரு உயிர் போனது தடுத்து இருக்கலாம்ல டா..... ஆன ஒன்னு டா ஸ்வாதி பத்தி இன்னும் Full Details வரல.. அப்படி வந்து அந்த பொண்ணு South Tamilnadu ஆ இருந்தானா சாத்தியமா சொல்றேன் உங்களுக்கு சாப விமோசனம் இருக்காது டா.... நீங்க வெள்ளத்துல இருக்கும் போது உங்களுக்கு உதவின ஊர்ல இருந்து வந்த பொண்ண உங்களால காப்பாத்த முடியாம போனதுக்கு நீங்க வெக்கப்படணும் டா.... #THAT_MAANANKETTA_POLAPPU_MOMENT

நடுநிலைவாதிகள்
இன்போசிஸ் IT ஊழியர் ஸ்வாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் குத்திக் கொலை -செய்தி. அவங்க என்ன ஜாதின்னு தெரிந்ததும், குரல் கொடுப்பேன் என்றான் நடுநிலைவாதி.












Click it and Unblock the Notifications