இரண்டு மாவட்டங்களில் நாளை ஆய்வு.. இன்று இரவே திருச்சி செல்லும் முதல்வர் மு.க ஸ்டாலின்
திருச்சி: திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று இரவு முதல்வர் மு.க ஸ்டாலின் விமானம் மூலம் திருச்சி செல்கிறார்.
திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று இரவு திருச்சி செல்கிறார். தூர்வாரும் பணிகளை நாளை ஆய்வு செய்ய உள்ளார். இது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தஞ்சாவூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க ஸ்டாலின் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

இதற்காக இன்று இரவு 9.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளோம். பின்னர் முதல்வர் மு.க ஸ்டாலின் தஞ்சைக்கு செல்கிறார். வெள்ளிக்கிழமை காலை தஞ்சை மாவட்டத்தில் 3 இடங்களில் தூர்வாரும் பணியை அவர் பார்வையிடுகிறார். அதன் பின்னர் பூண்டி பாலம் வழியாக வரும் முதல்வர் கூழையாற்றில் தூர்வாரும் பணிகளை பார்வையிடுகிறார்.

பின்னர் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி மெயின் ரோட்டில் நந்தியாற்றில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்துவிட்டு திருச்சி திரும்புகிறார். அதன்பிறகு திருச்சியில் இருந்து பிற்பகல் 2.30 மணி அளவில் விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்" என்றார். முதல்வர் மு.க ஸ்டாலின் திருச்சி வருகை தர உள்ளதை ஒட்டி அவரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகளை திமுகவினர் செய்துள்ளர். முதல்வர் வருகை தர உள்ளதை ஒட்டி திருச்சி மற்றும் தஞ்சையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
-
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன? -
கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருந்தால் இன்று நிலைமையே வேறு.. நாங்க ஏமாந்துட்டோம்! எவ வேலு -
திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் அர்ச்சகர் பயிற்சி பற்றி விஷமத்தனமான கருத்து.. அறநிலையத் துறை விளக்கம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications