பெரியபாண்டியன் கொலையில் தொடர்புடைய ஆய்வாளர் முனிசேகர் பணியிட மாற்றம்!
சென்னை கொளத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த முனிசேகர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை : சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுடப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஆய்வாளர் முனிசேகர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் நாதுராமை பிடிக்கச் சென்ற இடத்தில் மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார். பெரியபாண்டியனின் துப்பாக்கியாலேயே அவர் சுடப்பட்டதாகவும் கொள்ளையன் நாதுராம் தான் சுட்டதாகவும் முதலில் தகவல்கள் வெளியாகின.

ஆனால் ராஜஸ்தான் போலீசார் பெரியபாண்டியனுடன் வந்திருந்த ஆய்வாளர் முனிசேகர் தான் பெரியபாண்டியனை தவறுதலாக சுட்டுவிட்டதாக வழக்கு பதிந்துள்ளது. இது தொடர்பாக சென்னையிலும் முனிசேகர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரியபாண்டியன் கொலை சம்பவம் நடந்து 2 மாதங்களாகவும் அதே காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த முனிசேகர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முனிசேகர் தென்மண்டலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் மட்டுமே இடமாற்ற அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பாக எந்த காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் என்பதை தெளிவாக அறிவிக்கவில்லை.
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications