Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செக்ஸ் அடிமை போல நடத்தினார்.. கோபத்தில் குத்தி கொன்றேன்.. பெண் வக்கீல் கள்ளக்காதலன் பரபர வாக்குமூலம்

வயதில் மூத்திருந்தாலும், செக்ஸ் வெறியால் தன்னை அடிமை போல நடத்தியதால் கொலை செய்தேன் என பெண் வக்கீல் கொலை வழக்கில் கைதான நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: செக்ஸ் அடிமை போல நடத்தியதால் கள்ளக்காதலியை குத்தி கொலை செய்தேன் என்று, சென்னை பெண் வக்கீல் கொலையில் கைது செய்யப்பட்ட நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை மேற்கு மாம்பலம், தேவன் காலனியை சேர்ந்தவர் 58 வயதான லட்சுமி சுதா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவர் இறந்து 3 நாட்கள் ஆகியும் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. பின்னர், அவரது உடல் அரை நிர்வாணமாக, அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

Insurance company staff who killed woman lawyer gives the reason

இதுதொடர்பான விசாரணையில், லட்சுமி சுதா, ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார் என்பது தெரியவந்தது. இவருக்கு மகன் இருப்பதும், அவர் பெங்களூரில் வசித்து வருவதும் தெரிய வந்தது. ஆனால், இவர் எதற்காக கொல்லப்பட்டார் என்பது குறித்து தெளிவாக போலீசாருக்கு தெரியவில்லை. இதனால், 6 தனிப்படைகள் அமைத்து கொலையாளியை போலீசார் தேடி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, லட்சுமி சுதா வீட்டில் வேலை செய்தவர்கள், வாட்டர் கேன் போடுவோர் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை போலீசார் துருவி துருவி விசாரித்தனர். அப்போது, வக்கீலை பார்க்க ஒரு நபர் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வார் என்ற தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது. இதனால், லட்சுமி சுதாவிற்கு யார் யாருடன் தொடர்பு இருந்தது என்பது குறித்தும் அவர் நடத்தும் வழக்கு விவரங்கள் குறித்தும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வந்தனர்.

இதில், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் லட்சுமி சுதா சட்ட ஆலோசகராக பணியாற்றினார் என்பதும், அந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நொளம்பூரை சேர்ந்த 34 வயதான கார்த்திகேயன் என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வருவார் என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கார்த்திகேயனிடம் நேற்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது, கார்த்திகேயன், இன்சூரன்ஸ் கம்பனியின் சட்ட ஆலோசகராக இருந்த லட்சுமி சுதாவிடம் அடிக்கடி வழக்கு தொடர்பாக பேசி வந்ததையும், அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரிடையே நட்பு உருவானததையும், அந்த நட்பு பின்னர் காதலாக மாறியதை கூறியுள்ளார்.

இதுகுறித்து கார்த்திகேயன் அளித்த பரபரப்பு வாக்குமூலம்: மசாஜ் பார்லரில் வைத்துதான் லட்சுமி எனக்கு பழக்கமானார். அதிக வயது வித்தியாசம் என்றபோதிலும் அவரது அழகில் மயங்கி காதலை சொன்னேன். அவரும் 30 வருடங்களுக்கும் மேலாக கணவனை பிரிந்து வாழ்ந்ததால், காதலை ஏற்றுக்கொண்டார்.

எங்களது காதல் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், தனது மகனை பெங்களூர் அனுப்பி வைத்தார். எனக்கும் நல்ல நிறுவனத்தில் தனது பழக்கத்தை பயன்படுத்தி வேலை வாங்கி கொடுத்தார். தினமும் அவரோடு உல்லாசமாக இருப்பது வழக்கம். கணவனை பிரிந்து இருந்த ஏக்கம் முழுவதையும் நானே மொத்தமாக தீர்த்து வைக்க வேண்டியதாயிற்று. உடல் களைத்தாலும் அவர் விடுவதில்லை.

நான் ஒரு செக்ஸ் அடிமை போல நடத்தப்பட்டேன். இதனால் வெறுப்பாகிப்போய், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். 8 மாத குழந்தை எங்களுக்கு உள்ளது. லட்சுமியுடனான உறவை நான் கட் செய்ததும், அவரால் விரக தாபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. என்னை உறவுக்கு அழைத்து தொல்லை செய்தார். சம்பவத்தன்றும், என்னை அழைத்து மீண்டும் மீண்டும் உறவு கொள்ள கட்டாயப்படுத்தினார். ஆபீசில் வேலை இருப்பதாக மனைவியிடம் கூறிவிட்டு இங்கேயே இருக்குமாறும், அப்படி செய்யாவிட்டால், கள்ளக்காதல் ஆதாரங்களை வெளியிட்டு அவமானப்படுத்திவிடுவேன் என்றும் லட்சுமி மிரட்டினார்.

கோபமடைந்த நான் அதை வெளிக்காட்டாமல் மீண்டும் அவரோடு உறவு கொண்டேன். அப்போது நைசாக கத்தியால் அவரை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டேன். அக்கம்பக்கத்தினர் என்னை அவரது மகன் போன்ற நபர் என நினைத்திருந்தனர். ஆனால், வாட்டர் கேன் போட வரும் நபர்கள் சிலருக்கு எங்கள் மீது சந்தேகம் இருந்தது. இப்படித்தான் சிக்கிக்கொண்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+