Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துரித கதி.. புயலுக்கு பின்னேயும் அமைதி! அஸ்வினை பலிகொண்ட குற்றாலம்.. இப்போ எப்படி இருக்கு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

தென்காசி : குற்றாலம் வெள்ளத்தில் சிக்கி சிறுவன் அஸ்வின் உயிர் இழந்த சம்பவத்தின் எதிரொலியாக மெயின் அருவி தடாகத்தில், உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டு சங்கிலி தொடர் வளைவுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் வெள்ளத்தால் சேதமான பகுதிகளை சீரமைக்கும் பணியும் துரிதமாக நடப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

Intensification of construction of safety equipment to prevent casualties at Courtallam Main Falls

இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் பழைய குற்றால பகுதியில் ஏற்பட்ட எதிர்பாராத திடீர் வெள்ளப்பெருக்கினால் திருநெல்வேலியை சேர்ந்த அஸ்வின் என்ற சிறுவன் வெள்ளப்பெருக்கில் சிக்கி பரிதாபமாக பலியானான்.

சீராக நீர்வரத்து: நேற்று ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் குறைந்து தற்போது பழைய குற்றால அருவியில் நீர்வரத்து சீராக உள்ளது. நீர்வரத்து குறைந்த போதிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ள நிலையில் தற்போது பழைய குற்றால அருவி பகுதியில் பொதுமக்கள் செல்லாத வண்ணம் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளுக்கு தடை: வருகின்ற மே 21 ஆம் தேதி வரை தென்காசி மாவட்டத்திற்கு கனமழை கான எச்சரிக்கை உள்ள நிலையில் மறு உத்தரவு வரும் வரை குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடரும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதன் காரணமாகவும், பழைய குற்றால வெள்ளத்தில் சிறுவன் அடித்து செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டதன் எதிரொலியாகவும் குற்றால அருவிகள், அணைபகுதிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதித்துள்ளது.

பாதுகாப்பு வளைவுகள்: இதன் தொடர்ச்சியாக தீயணைப்பு துறை சார்பில் ஆய்வாளர் பிரதீப் குமார் தலைமையில் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மெயின் அருவியில் உள்ள தடாகத்தில் பாதுகாப்பு உபகரணங்களைக் கொண்டு சங்கிலி தொடர் வளைவுகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனை தீயணைப்பு துறை வீரர்கள் சுற்றுலா பயணிகள் வெள்ள காலங்களில் தடாகத்தை விட்டு தாண்டி செல்லாமல் இருக்கும் வகையிலும் பாதுகாப்பு வளைவுகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீரமைப்பு பணிகள்: சீசன் கால கட்டங்களில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில் தற்போது கனமழை எச்சரிக்கை காரணமாகவும், வெள்ளத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாகவும் இப்பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த பணியில் தீயணைப்புத்துறையினர், வனத்துறை, பொதுப் பணித்துறை அதிகாரிகள் இணைந்து ஈடுபட்டுள்ளனர். இதுமட்டுமின்றி வெள்ளத்தில் சேதமான பகுதிகளை சீரமைக்கும் பணிகளும் நடக்கிறது.

கடும் கட்டுப்பாடுகள்: இந்த பணிகள் நிறைவடைந்ததும் மழை எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டவுடனும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இன்னும் சில தினங்களில் பழைய குற்றாலம் அருவியும் வனத்துறை கட்டுப்பாட்டில் வரவுள்ளது. இதன் காரணமாக வனத்துறை விதிப்படி சுற்றுலாப் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என கூறப்படுகிறது. குறிப்பாக மாலை 6 மணிக்கு மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+