சேலம் தி.மு.க.வில் அடங்க மறுக்கும் உட்கட்சி பூசல்.. விரக்தியில் தி.மு.க. மேலிடம்!!
சென்னை: சேலம் மாவட்ட தி.மு.க.வில் அடங்க மற்றுக்கும் உட்கட்சி பூசலால் தி.மு.க. மேலிடம் கடுமையாக விரக்தி அடைந்துள்ளதாம்.. அதுவும் சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஆளுக்கொரு துருவங்களாக தி.மு.க. நிர்வாகிகள் பிரிந்து கிடப்பது அக்கட்சித் தலைமையை கதிகலங்க வைத்திருக்கிறதாம்.
லோக்சபா தேர்தலுக்கு தி.மு.க.வை பல மாவட்டங்களாகப் பிரித்து பெரும் போராட்டங்கள், பஞ்சாயத்துகளுக்குப் பின்னர் ஒருவழியாக நிர்வாகிகளை நியமித்தது தி.மு.க. தலைமை.. ஆனால் சேலம் மாவட்டத்துக்கு மட்டும் இன்னமும் நிர்வாகிகளை நியமிக்க முடியாமல் ஓராண்டாகப் போராடிக் கொண்டிருக்கிறது தி.மு.க.

இதனால்தான் சேலம் மத்திய மாவட்டத்துக்கு ராஜேந்திரனையும், கிழக்கு மாவட்டத்துக்கு வீரபாண்டி ராஜாவையும், மேற்கு மாவட்டத்துக்கு சிவலிங்கத்தையும் பொறுப்பாளர்களாக தி.மு.க. நியமித்தது. இதன்பிறகாவது ஒற்றுமை தென்படுகிறதா என இலவு காத்துக் கிடந்தது தி.மு.க.
ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இந்த மூன்று துருவங்களும் ஓரணியில் இணைவதாகத் தெரிவதில்லை.
வீரபாண்டி ராஜாவைப் பொறுத்தவரையில் சேலம் மாநகரில் தான் ஆதரவாளர்கள் அதிகம். ஆனால் அவரை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமித்ததால் அங்கிருக்கும் ராஜேந்திரன் ஆதரவாளர்கள் ராஜாவுக்கு ஒத்துழைப்பதில்லை.
இதனால் மாநகர் மாவட்டத்தில் இருக்கும் தி.மு.க.,வினர் ராஜாவுக்காக கிழக்கு மாவட்டத்துக்கு சென்று அரசியல் செய்கின்றனர். கட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.
இதேபோல் ராஜேந்திரன் ஆதரவாளர்களும் மாவட்டம் விட்டு மாவட்டம் தாவி கட்சி வேலை செய்கின்றனராம்.. இப்படி எல்லை மாறி வந்து கட்சியினர் அரசியல் செய்வது, சேலம் தி.மு.க.,வில் பெரும் புகைச்சலை கிளப்பி உள்ளது. இதை எப்படி சமாளிப்பது என தெரியாமல் தி.மு.க. தலைமை கடும் விரக்தியில் இருக்கிறதாம்
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications