பணக்காரர்களுக்குதான் கவனிப்பா? என் பேங்க் அக்கவுண்ட்டை குளோஸ் பண்ணுங்க- இப்படியும் ஒரு கலகக்குரல்!
ஐஓபி வங்கிகளில் அதிக வைப்புத் தொகை வைத்து வரவு செலவு பார்ப்பவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக தஞ்சையை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தஞ்சை : தம்பிக்கோட்டை வடகாடு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அதிக வைப்புத் தொகை வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே மரியாதை கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டை வடகாடு பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவர் அங்குள்ள ஐஓபி வங்கி கிளையில் கணக்கு வைத்துள்ளார்.

பணத்தை மாற்ற வங்கிக்கு சென்ற அவர் சந்தித்த கசப்பான அனுபவத்தால் தனது கணக்கை முடித்துக்கொடுக்கும்படி கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவ்வங்கியின் மேலாளருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். தற்போது முகநூல் பக்கத்தில் உலா வரும் அந்த அறிக்கையில் தான் தம்ஐஓபி வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளதாக கூறி கணக்கு எண்ணை தெரிவித்துள்ள அவர் வங்கிக்கு வரும் போதெல்லாம் நீண்ட நேரம் காக்க வைக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளார்.
பணக்காரர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கும் வங்கி நிர்வாகம் ஏழை எளிய மக்களை நீண்ட நேரம் காக்க வைப்பதோடு, அவர்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்துவதாக கூறியுள்ளார்.
இதனை தன்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர் இதனால் மிகுந்த மனவேதனை அடைந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
இனியும் தங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு வைக்க தனக்கு விருப்பம் இல்லை என்று கூறியுள்ள அன்பழகன், தனது கணக்கை கேன்சல் செய்து வைப்புத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கேட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications