கிரிக்கெட் வாரியத்தின் சக்தி வாய்ந்த மனிதராக உருவெடுத்து சக்கையாக தூக்கி வீசப்பட்ட லலித் மோடி!!
சென்னை: இந்திய கிரிக்கெட் வாரியம் பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட அடித்தளம் போட்டி அடிநாதமாக உழைத்து வென்றும் காட்டியவர் லலித் மோடி.. ஆம் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் அதிசக்தி வாய்ந்த மனிதராக வலம் வந்து இப்போது சக்கையாக 'ஆயுளுக்கும்' தூக்கி வீசி எறியப்பட்டிருக்கிறார் லலித் மோடி..
லலித் மோடி... இன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளையும் டெஸ்ட் போட்டிகளையும் கிரிக்கெட் ரசிகர்களிடம் இருந்து பின்னுக்குத் தள்ளிவிட்ட ஐ.பி.எல். போட்டிகளின் பிதாமகன்! ஆனாலும் ஐபிஎல் ஒன்றும் லலித் மோடியின் சொந்த சரக்கும் அல்ல..
கபில் தேவ் போட்ட டீயை எடுத்து கப்பை மட்டும் மாற்றி காப்பி அடித்து ஐபிஎல் என்ற டிகாக்ஷனை கலந்து வித்தை காட்டியவர்தான் மோடி.

கபில்தேவின் ஐசிஎல்
2007ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் மோதல் போக்கை கடைபிடித்த கபில்தேவ் உருவாக்கியதுதான் ஐ.சி.எல். இதுதான் டெல்லி, கொல்கத்தா, சென்னை அணிகள் என்ற முறையை அறிமுகப்படுத்தியது. இதுவேதான் மீடியாக்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் விளம்பரப்படுத்தவும் திட்டமிட்டது. அப்போது லலித் மோடி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணைத் தலைவராக, பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்தார்

ஐசிஎல்லை காலி செய்து உருவான ஐபிஎல்
கபில் உருவாக்கிய ஐசிஎல் மூலம் அதிக வருவாய் கிடைக்கும் என்பதை உணர்ந்து கொண்ட மோடி, கவாஸ்கர் மூலம் கபில்தேவை கவிழ்க்க முயற்சித்தார். ஒருவழியாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமே ஐசிஎல் போட்டிகளை முன் மாதிரியாகக் கொண்டு ஐபிஎல் போட்டிகளை நடத்த தொடங்கியது.. அதன் கமிஷனராக இருந்தார் லலித் மோடி... அப்புறம் என்ன இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் காட்டில் பண மழைதான்!

மோடி காலத்தில் குவிந்த பணம்..
லலித் மோடி நிர்வாகப் பொறுப்பில் இருந்த காலத்தில் கிரிக்கெட் போட்டிகளை எப்படியெல்லாம் மார்க்கெட்டிங் செய்ய முடியுமோ அத்தனை வழிகளிலுமே வியாபாரமாக்கி கிரிக்கெட் வாரியத்துக்கு எவ்வளவு காசு சேர்த்த முடியுமோ தந்தார்.. அவரது 2005 முதல் 2010ஆம் ஆண்டு காலத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வருவாய் என்பது 8 பில்லியன் டாலரில் இருந்து 60 பில்லியன் டாலராக விஸ்வரூபமெடுத்தது அனைவரும் ஒப்புக் கொள்ளக் கூடிய ஒன்றுதான்.

இப்படித்தான் ஒப்பந்தங்கள்...
இந்திய அணிக்கு ஆடை உபகரணங்களுக்கு ஒப்பந்தம், மீடியா உரிமை ஒப்பந்தம், ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை ஒப்பந்தம் சகட்டுமேனிக்கு கிரிக்கெட்டை கூறு கூறாக பிரித்து ஒப்பந்தம் போட்டி வருவாய் வெள்ளத்துக்கு மடை வெட்டியவர் லலித் மோடி.

கொட்டோ கொட்டென குவிந்த விருதுகள்
லலித் மோடியின் இந்த வியாபார யுக்திக்காக குவிந்த விருந்துகளும் பாராட்டுகளும் எண்ணிலடங்காவை. கபிலிடம் இருந்து ஐசிஎல்லை கைப்பற்றி ஐபிஎல்லை உருவாக்கி பணமழை பொழிய வைத்த மோடியை அனேகமாக அத்தனை ஸ்போர்ட்ஸ் ஏடுகளுமே ஒவ்வொரு வகையில் பெருமிதப்படுத்தியே வந்தன.

விளையாட்டு உலகின் சக்திவாய்ந்த நபர்
உலக அளவில் விளையாட்டு உலகின் சக்தி வாய்ந்த 25 நபர்களில் ஒருவராக லலித் மோடியை சொன்னது 2008-ல் பிசினஸ் வீக் ஏடு.

2010-ல் இறங்கு முகம்
2010 ஐபிஎல் போட்டிகளின் போது கொச்சி அணியின் உரிமையாளர் தொடர்பாக மோடி கிளப்பிவிட்ட சர்ச்சையில் தொடங்கியது அவரது இறங்கு முகம். அதுமுதல் பிசிசிஐக்கும் மோடிக்கும் ஏழாம் பொருத்தமாகிவிட்டது. மோடியின் பல தரப்பட்ட நுட்பமான முறைகேடுகள் அதிர்வலைகளை கிளப்பின.

ரூ470 கோடியை விழுங்கிய மகாதேவன்
அத்துடன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ரூ470 கோடி நிதியை செலவிட்ட கணக்கை லலித் மோடி தாக்கவில்லை என்றும் ஒரு புகார் எழுந்தது. இதில் அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டன.இன்டர்போல் மூலமும் மடக்க முயற்சிக்கப்பட்டது.

அடுத்தடுத்த முறைகேடு
அத்துடன் ஒளிபரப்பு உரிமை போன்றவற்றிலும் மோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக சென்னை போலீசில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சீனிவாசன் புகார் செய்ய தப்பி ஓடினார் இங்கிலாந்துக்கு மோடி.

இங்கிலாந்தில் இருந்து ஒரே குடைச்சல்
இங்கிலாந்துக்கு தப்பி போன லலித் மோடி அங்கிருந்தும் சும்மா இல்லை.. பயந்து கொண்டு தலைமறைவாகிப் போனவர் வீராப்பாக புகார்களை குடைச்சலை பதுங்கிக் கொண்டே கொடுக்கத் தொடங்கினார். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின் போது பிக்சிங் புகார் எழுந்த போதும் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தார் லலித் மோடி

ஒருவழியாக குடைச்சலுக்கு குட்பை
இந்நிலையில் உச்சநீதிமன்றமே நீங்க என்ன பெரிய அப்பாடக்கரா என்று விமர்சித்த நிலையில் இன்று லலித் மோடியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து நீக்கி ஆயுள் கால தடை விதித்துள்ளது. ஆம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சக்தி வாய்ந்த சக்தியாக வலம் வந்து கொண்டிருந்த லலித் மோடி இப்போது சக்கை போல தூக்கி வெளியே வீசப்பட்டுவிட்டார்.
-
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
நாதக கூட்டத்தில் ஒலித்த டிவிகே கோஷம்.. டீயாடா விக்கிறாய்? தற்குறிகள்! டென்ஷனான சீமான்..ஒரே பரபரப்பு -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications