வசூல்ராஜா பட பாணியில் ஐஏஎஸ் தேர்வில் காப்பி.. சென்னையில் ஐபிஎஸ் அதிகாரி கைது!

Subscribe to Oneindia Tamil
ஐபிஎஸ் அதிகாரி மனைவி ஒன்றரை வயது குழந்தையோடு புழல் சிறையில் அடைப்பு- வீடியோ

சென்னை : நேற்று நடந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் எழுத்துத் தேர்வில் காப்பியடித்ததற்காக உதவி எஸ்.பி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

2017ம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் பணியிடங்களை நிரப்பும் பணி நடந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு முதன்மைத் தேர்வு முடிந்திருந்த நிலையில், நேற்று அதில் தேர்வானவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடந்தது.

IPS Officer caught in Chennai for doing malpractice in Civil Service Main exam

இதில் ஏற்கனவே ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு நாங்குநேரி உட்கோட்ட பிரிவில் பயிற்சி எஸ்.பி ஆக பணியாற்றி வரும் ஷபீர் கரீம் என்பவரும் சென்னை எழும்பூரில் உள்ள பெண்கள் மேனிலைப்பள்ளியில் தேர்வு எழுதினார். கமல் நடித்த வசூல்ராஜா பட பாணியில், ப்ளூடூத் கருவியின் உதவியுடன் காப்பி அடித்ததற்காக அவரை பறக்கும் படை அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்தனர்.

இதுகுறித்து ஷபீர் கரீம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணை நடந்துவரும் நிலையில், ப்ளூடூத் கருவி மூலம் தனது மனைவியின் உதவியுடன் தேர்வெழுதினார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவரது மனைவியும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட இருக்கிறார் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
IPS Officer caught in Chennai for doing malpractice in Civil Service Main exam. He used Bluetooth device to crack the exam. Police went on investigation
Please Wait while comments are loading...