தமிழகத்தில் போட்டி அரசாங்கம் நடத்துகிறாரா ஆளுநர் ரவி? பெட்ரோல் ஊற்றுகிறாரா துணை ஜனாதிபதி? -கி.வீரமணி
சென்னை: தமிழகப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்கள் மாநாட்டை ஏப்ரல் 25, 26, 27 ஆகிய தேதிகளில் நடத்துவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளது சட்ட மீறல்; உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவதாகும் என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை: 8.4.2025 அன்று உச்சநீதிமன்றம், தமிழ்நாடு ஆளுநர் நடவடிக்கை பற்றி கண்டனம் தெரிவித்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியது.

அத்தீர்ப்பின்படி, இரண்டு முறை தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பியும் கூட, பல மாதங்களாக ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்திருந்த தமிழ்நாடு ஆளுநரின் செயல், அரசமைப்புச் சட்டத்தின் கூறு (Article) 200 இன்படி சட்ட விரோதம் என்று கூறி, தமிழ்நாடு அரசுக்கு "முழு நீதி'' (Complete justice) வழங்க வேண்டும் என்பதில் இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 142இன்படி எந்த தேதியில் அது நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டதோ, அன்று முதல் (18.11.2023) இந்த மசோதாக்கள் அமலுக்கு வருவதாகக் கொள்ளப்படும் என்று ஆணையிட்டிருக்கிறார்கள்.
ஆளுநர் ரவிக்கு அதிகாரமே இல்லை
அதன் படி, தமிழ்நாடு ஆளுநர் ரவிக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை அழைக்கவோ, கலந்தாலோசிக்கவோ உத்தரவுகள் பிறப்பிக்கவோ எந்த அதிகாரமும் இல்லை என்பதுதான் தமிழ்நாடு சட்டப் பேரவையில் இரண்டுமுறை நிறைவேற்றப்பட்டு, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி தற்போது அமலுக்கு வந்துள்ள சட்டங்களின்படியும், அரசமைப்புச் சட்டப்படியும் உள்ள தற்போதைய நிலை ஆகும்.
துணைவேந்தர்கள் மாநாடு
இந்நிலையில் ஏப்ரல் 25, 26, 27 ஆகிய நாள்களில் ஊட்டியில் உள்ள ஆளுநரின் கோடை மாளிகைக்குத் துணைவேந்தர்கள் கூட்டம் என்ற பெயரில், அனைத்துத் துணைவேந்தர்களையும் பங்கேற்குமாறு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாகச்
செய்திகள் வருகின்றன.
அப்பட்டமான அரசியல் சாசன மீறல்
இது உண்மையாக இருந்தால், ஆளுநரின் இந்தச் செயல்
1. அப்பட்டமான அரசியல் சட்ட மீறல்
2. ஆளுநர் நடத்தும் 'போட்டி அரசாங்கம்' (Parallel Government)
3. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான நடவடிக்கை
4. 'நீதிமன்ற அவமதிப்பு'
5. குடியரசுத் துணைத் தலைவரும் இதில் வந்து கலந்து கொள்வது எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றுவது போன்ற அடாவடி நடவடிக்கை; அரசியல் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையும் கூட!
துணைவேந்தர்கள் புறக்கணிக்க வேண்டும்
எனவே, ஏப்ரல் 25, 26, 27 ஆகிய தேதிகளில் ஆளுநர் அழைத்துள்ள கூட்டத்தில் பல்கலைக் கழக துணைவேந்தர்கள் கலந்துகொள்ளக் கூடாது. ஆளுநர் அழைப்பைப் புறக்கணிக்க வேண்டியது துணைவேந்தர்களின் சட்டப்படியான
கடமையாகும்.
அரசியல் அடாவடித்தனம்
இந்த 'விபரீத விளையாட்டு'களின் மூலம் ஆளுநரோ, குடியரசுத் துணைத் தலைவரோ ஓர் அரசியல் நெருக்கடியை - உச்சநீதிமன்றத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் உருவாக்கிடும் அரசியல் அடாவடித்தனமேயாகும் - ''வேலியே பயிரை மேயலாமா?'' தமிழ்நாட்டு மக்கள் இந்த அரசியல் விபரீத விளையாட்டைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழ்நாடு மக்களின் சார்பில் இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதற்காக, குடியரசுத் துணைத் தலைவர் மீது மாநிலங்களவையில், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு வரவேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications