ஓ.பி.எஸ் கேட்டதை பார்த்து மிரண்டுபோன எடப்பாடி பழனிச்சாமி.. அதிமுக இணைவதில் சிக்கல்?
ஓ.பன்னீர் செல்வம் அணியின் பதவி குறித்த நிபந்தனைகளால் வாயடைத்துள்ள எடப்பாடி அணி வாயடைத்து உள்ளதால் அதிமுக இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
சென்னை: ஓ.பன்னீர் செல்வம் அணியின் பதவி குறித்த நிபந்தனைகளால் வாயடைத்துள்ள எடப்பாடி அணி வாயடைத்து உள்ளதால் அதிமுக இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு இரு அணிகளாக செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் கட்சியின் உயர் பதவியை லாபலகமாக கைப்பற்றிய சசிகலா, ஆட்சியையும் கைப்பற்ற இருந்தார்.
அந்த நேரத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். இரு அணிகளும் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைத்துக் கொண்டிருந்தனர். முக்கியமாக ஜெயலலிதா மரணம் குறித்த விவகாரத்தில் விஜயபாஸ்கரும், ஓ.பன்னீர் செல்வமும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டனர்.

முத்தாய்ப்பாக அமைந்த ஓபிஎஸ் பேச்சு
இந்நிலையில் தினகரன் மீது கொங்கு மண்டலத்தினர் அதிருப்தியில் இருந்தனர். அவரை எப்படி கிழட்டி விடலாம் என்று யோசித்து கொண்டிருந்தனர். அந்த வேளையில், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் சிக்கினார். அப்போது மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்ஸிடம், எட்பபாடி அணியினர் பேச்சுவார்த்தை நடத்தினால் இரு அணிகளும் இணைய வாய்ப்புண்டா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு வந்தால் ஏற்போம் என்றார்.

தம்பிதுரை வரவேற்பு
ஓபிஎஸ் தெரிவித்த கருத்தை வரவேற்பதாக லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையும் வரவேற்பு தெரிவித்தார். இந்நிலையில் சசிகலாவை சந்திக்க தினகரன் பெங்களூர் சென்றிருந்தபோது அமைச்சர் தங்கமணி தலைமையில் அமைச்சர்கள் கூட்டம் அவரது வீட்டில் நடைபெற்றது. அப்போது ஓபிஎஸ்ஸின் கருத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டு இரட்டை இலைக்காகவும், கட்சி நலனுக்காகவும் அதிமுக ஒன்றிணைவது என்று தெரிவித்தனர். இதுதொடர்பாக இரு அணிகளின் சார்பில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பன்னீரின் நிபந்தனை
அதிமுக இணைய வேண்டும் என்றால் சசகிலாவையும், தினகரனையும் கட்சியிலிருந்து ஒதுக்க வேண்டும் என்றனர். பின்னர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினர். இதில் முதல் கோரிக்கையை நிறைவேற்ற எடப்பாடி கோஷ்டியினர் முடிவு செய்து அறிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த தினகரன் தனக்கென 4 எம்எல்ஏ-க்களை சேர்த்துக் கொண்டு தன்னை நியமித்த சசிகலா சொன்னால்தான் அதிமுக துணை பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றார். மேலும் அவரது ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் , ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை கோரிய ஓபிஎஸ் மீது கடுமையாக குற்றம்சாட்டினார். அவர் முதல்வர் பதவி, பொதுச் செயலாளர் பதவி, அமைச்சர் பதவிகள் என கோருவதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

குழுக்கள் அமைப்பு
இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் முதல்வர் பதவி, பொதுச் செயலாளர் பதவி யாருக்கு என்பது தொடர்பாகவும், ஓபிஎஸ் அணியினர் செல்வாக்கான அமைச்சர் பதவிகளை கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் எடப்பாடி அணியினரோ ஜெயலலிதா இருக்கும் யார் யாருக்கு என்னென்ன அமைச்சர் பதவி வழங்கப்பட்டதோ அதுதான் வழங்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இந்நிலையில் டெல்லி சென்றுள்ள எடப்பாடி இன்று வந்தபிறகு இரு அணிகளின் தலைவர்களும் நாளை பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த நிபந்தனைகள் குறித்து எட்ப்பாடி அணியினர் மௌனம் காத்து வருவதால் இரு அணிகளும் இணையுமா என்பது குறித்து சிக்கல் எழுந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications