கறுப்புக்குள் காவியும் அடங்கும்... கமல் பொதுக்கூட்டத்திற்காக ஜொலிக்கும் சுவர் விளம்பரங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கறுப்புக்குள் காவி ... கமலின் அரசியல் நிறத்தை பிரதிபலித்த சுவர் விளம்பரம்- வீடியோ

  மதுரை : மதுரையில் வருகிற 21ம் தேதி கமல் தொடங்க உள்ள முதல் அரசியல் பொதுக்கூட்டத்தை ஒட்டி சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. வழக்கமாக கட்சிக் கொடியின் நிறத்தை பிரதிபலிக்கும் வகையில் அந்தந்த கட்சியரின் பெயர்கள் சுவர் விளம்பரங்களில் அந்த நிறங்களில் வரையப்படும். இதே போன்று கமலுக்கான சுவர் விளம்பரத்தில் கறுப்பு நிறத்திற்குள் காவி அடங்கும் விதத்தில் கமல்ஹாசனின் பெயர் எழுதப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

  அரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் இந்த மாதம் 21ம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளார். அன்றைய தினம் ராமேஸ்வரத்தில் பொதுக்கூட்டம் நடத்தி கட்சியின் கொடி மற்றும் பெயரை அறிவித்த கையோடு 'நாளை நமதே' பயணத்தை தொடங்க உள்ளதாகவும் கமல் அறிவித்தார்.

  ஆனால் ராமேஸ்வரத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதில் சிக்கல் இருப்பதாக ரசிகர் மன்றத்தினர் கூறியதையடுத்து கமலின் பொதுக்கூட்டம் மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளது. காலையில் அப்துல் கலாம் வீட்டில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கி மாலையில் மதுரையில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய நற்பணி இயக்க பொறுப்பாளர் தங்கவேலு அறிவித்தார்.

  தயார் நிலையில் மதுரை

  தயார் நிலையில் மதுரை

  இதனையடுத்து கமலின் முதல் அரசியல் பொதுக்கூட்டத்திற்காக மதுரை தயாராகி வருகிறது. வழக்கமாக அரசியல் கட்சி தொடங்கும் பலருக்கும் திருப்புமுனையான இடமாக அமைவது மதுரை. எம்ஜிஆர் தொடங்கி, விஜயகாந்த், தினகரன் என அனைவரும் தங்களது முதல் அரசியல் வருகையை மதுரை பொதுக்கூட்டத்தில் இருந்து தான் தொடங்கினர்.

  ரசிகர் மன்றத்தினரின் வேண்டுகோள்

  ரசிகர் மன்றத்தினரின் வேண்டுகோள்

  கமலின் பொதுக்கூட்டமும் மதுரையில் இருந்தே தொடங்குவதாக முதலில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் இதனை கமல் மறுத்திருந்த நிலையில் ராமநாதபுரத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதில் நடைமுறை சிக்கல் இருப்பதாக ரசிகர் மன்றத்தினர் கூறியதையடுத்து மதுரையிலேயே கூட்டத்தை நடத்த கமல் ஒப்பு கொண்டுள்ளார்.

  மதுரையில் சுவர் விளம்பரங்கள்

  மதுரையில் சுவர் விளம்பரங்கள்

  கமலின் முதல் பொதுக்கூட்டம் என்பதால் மதுரையில் சுவர் விளம்பரங்கள் தூள் பறக்கின்றன. கமல்ஹாசனின் நாளை நமதே பயணத்தை குறிப்பிட்டும், கமலை வரவேற்றும் வரையப்பட்டுள்ள இந்த சுவர் விளம்பரத்தில் உள்ள பளிச்சிடும் நிறங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. பொதுவாக அரசியல் கட்சியினரின் பெயர்கள் விளம்பரப்படுத்தப்படும் போது அவர்கள் சார்ந்த கட்சிக் கொடியின் நிறத்திலேயே பெயர்களின் வண்ணமும் தீட்டப்படும்.

  ஜொலிக்கும் காவி நிறம்

  ஜொலிக்கும் காவி நிறம்

  கமல்ஹாசனின் பெயருக்கு பூசப்பட்டுள்ள வர்ணத்தில் காவி நிறத்திலும் அதற்கான பார்டர் கருப்பு நிறத்திலும் உள்ளது. இதனை பார்த்து சமூக வலைதளத்தில் பலரும் கறுப்புக்குள் அடங்கும் காவி என்று கூறி வருகின்றனர். கமலின் அரசியல் பாதை என்னவென்று தெரியாத நிலையில், அவருடைய ரசிகர் மன்றத்தினர் சார்பில் வரையப்பட்டுள்ள இந்த சுவர் விளம்பரம் அடுத்த கட்ட விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

  புது அரசியலோ?

  புது அரசியலோ?

  திராவிடம், நாத்திகம் பேசும் கமலின் அரசியல் நிறம் என்ன என்று பலரும் எதிர்பார்ப்புடன் இருக்கும் வேளையில் கறுப்புக்குள் காவியை அடக்கி இருக்கும் சுவர் விளம்பரம் சொல்வது என்ன என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அநேகமாக ஆன்மிக அரசியல் போல கமலும் ஏதாவது ஒரு புதுவித அரசியலை புகுத்துவாரோ?

  கமல் கட்சியின் நிறம் இதுதானா?

  கமல் கட்சியின் நிறம் இதுதானா?

  ரசிகர்கள் சுற்றுப்பயணத்திற்கான விளம்பரங்கள் செய்யும் போது மேலிடத்தின் அனுமதியைப் பெற்று தான் எதுவாக இருந்தாலும் செய்ய வேண்டும் என்று கமல் ஏற்கனவே கட்டளை போட்டுள்ளார். அப்படியானால் காவி தான் கமலின் கட்சிக் கொடியின் நிறமா மேலிட அனுமதியுடன் தான் காவி நிறம் கமலின் விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளதா என்று பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இதற்கான முற்றுப்புள்ளி பிப்ரவரி 21ம் தேதி தான் வைக்கப்படும்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Madurai is getting ready for Kamalhaasan's frist political meeting

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற