Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எது அறநிலையத்துறையா? “நங்கநல்லூர் சம்பவம்” பற்றி எடப்பாடி சொன்ன தவறான தகவல்.. விளாசும் நெட்டிசன்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : நங்கநல்லூரில் குளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தவறான தகவலை கூறியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோவிலில் நிகழ்ந்த சம்பவத்திற்கு, அறநிலையத்துறையை பொறுப்பேற்கச் சொல்வதா? என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

சென்னை நங்கநல்லூர் அருகே கங்கை அம்மன் கோவில் பகுதியில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சாமி ஊர்வலம் நடைபெற்றது. சாமி ஊர்வலத்தின் போது அருகில் உள்ள மூவரசம்பேட்டையில் உள்ள குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

தீர்த்தவாரியின்போது சாமி சிலை மற்றும் அர்ச்சனை பொருட்களுடன் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி எழுவது வழக்கம். அப்போது எதிர்பாராதவிதமாக ஒருவர் மூழ்க, அவரை காப்பாற்ற அடுத்தடுத்து சென்ற 5 பேர் மூழ்கினர். நீரில் மூழ்கியவர்களை தேடும் பணி நடைபெற்ற நிலையில் 5 பேரும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

Is nanganallur temple under hrce department? netizens slams edappadi palanisamy

பழவந்தாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதோடு உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சாமி ஊர்வலத்தின் போது நிகழ்ந்த இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில், "சென்னை நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அறநிலையத் துறையின் அலட்சியத்தாலும் மெத்தனத்தாலுமே இத்தகைய அசம்பாவிதங்கள் கோவில் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நடைபெறுகிறது.

உயிரிழந்த 5 அர்ச்சகர்களுமே 15 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளவயதினர் என்பது மேலும் வருந்தத்தக்கது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருக்க மிகுந்த கவனத்துடன் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்தார்.

முன்னதாக, 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி இறந்தது குறித்துப் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஐந்து நபர்கள் இறந்த குளம் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான குளம் இல்லை என்றும் பஞ்சாயத்துக்கு சொந்தமான குளம் என்பதால், குளத்தின் பராமரிப்பு குறித்தும் விசாரணை நடைபெற்றுவருகிறது எனத் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசனும், தகுந்த பாதுகாப்புடன் இந்த நிகழ்வை நடத்தி இருக்க வேண்டும். தகுந்த பாதுகாப்பு இல்லாமல் நிகழ்வை நடத்தியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோயில். நிகழ்வுக்கு முன்பாக காவல்துறைக்கு முறையாக தகவல் அளிக்கப்பட்டதா, இல்லையா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்" எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Is nanganallur temple under hrce department? netizens slams edappadi palanisamy

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்து தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததுபோல இந்த கோயில் அறநிலையத்துறையின் கீழ் வராது என்பதை நெட்டிசன்கள் ஆதாரத்துடன் விளக்கி ஈபிஎஸ்ஸின் ட்விட்டர் பதிவிற்கு பதில் அளித்து வருகின்றனர்.

இந்தக் கோவில் இந்து சமய நங்கநல்லூர் ஸ்ரீ சர்வமங்கலாம்பிகை பக்த சமாஜம் என்ற அமைப்பின் கீழ் இந்தக் கோவில் நிர்வகிக்கப்படுகிறது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோவிலில் நிகழ்ந்த சம்பவத்திற்கு, அறநிலையத்துறையை பொறுப்பேற்கச் சொல்வதா? முதலமைச்சராக இருந்தவருக்கு இந்த செய்தி கூட தெரியாதது அவருடைய அறியாமையை காட்டுகிறது என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+