2ஜி வழக்கின் தீர்ப்பு ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
2ஜி வழக்கின் தீர்ப்பு ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை : 2ஜி வழக்கில் தி.மு.க.,விற்கு சாதகமாக தீர்ப்பு வந்திருப்பது ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வாக்களித்துக் கொண்டிருக்கும் மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் நடக்க வேண்டிய தேர்தல், பணப்பட்டுவாடா புகாரால் தள்ளி வைக்கப்பட்டது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு நடுவே மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆறு ஆண்டுகளாக நடந்து வந்த 2ஜி வழக்கின் தீர்ப்பும் இன்று வெளியாகி உள்ளது. தி.மு.க.,வின் முக்கிய தலைவர்களான முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, நாடாளுமன்ற எம்.பி கனிமொழி ஆகியோர் உள்ளிட்ட இந்த வழக்கில் குற்றம்சாட்டிருந்த அனைவரும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.
இதனால் தமிழகம் முழுவதும் தி.மு.க தொண்டர்கள் இதை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். தேசிய அளவில் பல முக்கிய தலைவர்களும் தி.மு.க.,விற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த தீர்ப்பு இனி தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், ஆர்.கே நகர் தேர்தல் வாக்குப்பதிவை எண்ணி மற்ற கட்சி தலைவர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர். ஏற்கனவே, தி.மு.க.,விற்கு ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்ததால் மிகவும் பலம் பொருந்திய கூட்டணியாக பார்க்கப்பட்டது.
தி.மு.க குற்றம் செய்யவில்லை என்று வெளியாகி இருக்கும் இந்த தீர்ப்பு இனி ஆர்.கே நகரில் வாக்களிக்க இருக்கும் மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி தங்களின் வெற்றி வாய்ப்பை பறித்துவிடுமோ என்று மற்ற கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications