அப்பா அழகிரிக்காக தாத்தா கருணாநிதியிடம் பேசி மனதைக் கரைத்தது பேத்தி கயல்விழியாமே!
சென்னை: மு.க.அழகிரியின் மகள் கயல்விழிதான் திமுக தலைவர் கருணாநிதியிடம் தனது தந்தை குறித்து உருக்கமாகப் பேசி அவரை இறங்கி வர வைத்தார் என்று சொல்கிறார்கள். இதனால்தான் அழகிரியை மன்னிக்கும் அளவுக்கு கருணாநிதி மனம் மாறினாராம்.
பொதுவாக அப்பா, பிள்ளைகளுக்கு இடையே சண்டை வந்தால் இந்தப் பேரப் பிள்ளைகள்தான் உள்ளே புகுந்து ஏதாவது செய்து சமரசம் ஏற்படுத்தி சந்தோஷத்தைத் திரும்பக் கொண்டு வந்து விடுவார்கள்.
அதே கதைதான் கருணாநிதி குடும்பத்திலும் நடந்திருக்கிறதாம். அழகிரியின் மகள் கயல்விழிதான் தனது தாத்தாவைப் போய்ப் பார்த்து தாத்தா தாத்தா இங்கே பாருங்க என்று ஆரம்பித்து தனது தந்தை குறித்து நெகிழ்ச்சியாகப் பேசி, தனது அன்பால் தாத்தாவைக் கரைத்து அவரை வழிக்குக் கொண்டு வந்தாராம்.

திரும்பி வருகிறார் அழகிரி
திமுகவிலிருந்து நீக்கப்பட்டவரான மு.க.அழகிரி மீண்டும் திமுகவுக்குத் திரும்பவுள்ளதாக பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. 30ம் தேதி அதாவது நாளை அழகிரியின் பிறந்த நாள். இதை மதுரையில் அவரது ஆதரவாளர்கள் தடபுடலாக கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் நாளை திமுகவுக்குத் திரும்புவது தொடர்பான அறிவிப்பை அழகிரி வெளியிடலாம் என்று தெரிகிறது.

3 வருஷமாச்சு
கடந்த 2013ம் ஆண்டு பிறன்த நாள் சமயத்தில்தான் கட்சியை விட்டு நீக்கப்பட்டார் அழகிரி. அதன் பின்னர் 2014, 2015 ஆகிய இரு ஆண்டுகளிலும் அவரது பிறந்த நாள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. கட்சியில் மீண்டும் சேர்க்கப்படுவார் என்று நம்பப்பட்டு கடைசி வரை அது ஏமாற்றத்திலேயே முடிந்தது.

இந்த ஆண்டு கன்பர்ம்ட்!
ஆனால் இந்த ஆண்டு நிச்சயம் அழகிரி திமுகவில் சேருவது உறுதி என்று சொல்கிறார்கள். காரணம், கருணாநிதி மனசை மொத்தமாக மாற்றி விட்டாராம் அழகிரியின் மகள் கயல்விழி. யாராலாலும் சாதிக்க முடியாததை இந்த பேத்தி சாதித்து விட்டாராம்.

அப்பா குறித்து உருக்கம்
சமீபத்தில் தாத்தாவை கயல்விழி சந்தித்தபோது தனது அப்பா குறித்து உருக்கமாக பேசியுள்ளார். பல விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டாராம். அதைக் கேட்டு கருணாநிதி நெகிழ்ந்து போய் விட்டாராம்.

என்னை வந்து பார்க்கச் சொல்
இதையடுத்து உன் அப்பாவை என்னை வந்து பார்க்கச் சொல் என்று கூறி விட்டாராம். இதைக் கேட்டு கயல்விழி உற்சாகமடைந்த அங்கிருந்தபடியே தனது தந்தைக்குத் தகவலை பாஸ் செய்துள்ளார். அழகிரியும் உற்சாகமாகி விட்டாராம்.

சென்னை விரைந்தார்
தற்போது அழகிரி தனது மனைவி காந்தியுடன் சென்னை வந்து விட்டார். நாளை அவர் கருணாநிதியை நேரில் சந்திக்கலாம் என்று தெரிகிற. அப்படி சந்திப்பது உறுதியானால், அவர் நாளையே திமுகவில் சேரும் அறிவிப்பும் வெளியாகி விடும் என்று நம்பப்படுகிறது.
எல்லாக் "கூட்டணியும்" சிறப்பாக வர வேண்டும் என்பதே திமுகவினரின் இப்போதையே ஒரே பிரார்த்தனை என்பது குறிப்பிடத்தக்கது!
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications