ஜெ.க்கு சிகிச்சையளித்த டாக்டர் சிவகுமார் வீட்டிலும் ஐடி ரெய்டு! முக்கிய தகவல்கள் வெளியாகுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரி ரெய்டு-வீடியோ

சென்னை: திருச்சியில் டாக்டர் சிவகுமார் வீட்டில் ஐ.டி. அதிகாரிகள் ரெய்டு மேற்கொண்டுள்ளனர்.

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தபோது, டாக்டர் சிவகுமாரும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவர் ஆவார்.

IT officials has raided at Dr. Sivakumar house

சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனனின் மகள் பிரபா. இந்த பிரபாவின் கணவர்தான் டாக்டர் சிவகுமார். அப்பல்லோவில் இவர் ஜெயலலிதா சிகிச்சைகளை மேற்பார்வை செய்து வந்தது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

ஜெயலலிதாவுக்கு முன்பு சிகிச்சையளித்தவர் டாக்டர் ஷங்கர். இவர் முன்னாள் ஆளுநர் ரோசய்யா போன்ற விஐபிகளுக்கு சிகிச்சையளித்த பிரபல டாக்டர். ஆனால் ஜெயலலிதாவுக்கு பிற்காலத்தில் இவரால் சிகிச்சையளிக்க முடியவில்லை.

தவறான சிகிச்சை முறைகளால்தான் ஜெயலலிதா மரணமடைந்தார் என்று ஷங்கர் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில், சிவகுமார் வீட்டிலும் ரெய்டு நடந்துள்ளது. எனவே ஜெயலலிதா சிகிச்சை நடைமுறை குறித்து ஏதேனும் தகவல் வெளியாகுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
IT officials has raided at Dr. Sivakumar house, who has giver treatment to Jayalalitha.
Please Wait while comments are loading...