திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!
திருச்செங்கோடு: திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் 2-வது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். விவேகானந்தா கல்லூரியின் தாளாளர் கருணாநிதிக்கு சொந்தமான வீடு, தோட்டங்களில் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். நாமக்கல் லோக்சபா தொகுதியின் வாக்குகள் இந்த கல்லூரியில்தான் எண்ணப்பட இருக்கின்றன.
திருச்செங்கோடு அருகே இளையம்பாளையத்தில் விவேகானந்தா கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரி, நர்சிங் கல்லூரி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இதன் மகளிர் கல்லூரியில்தான் நாமக்கல் லோக்சபா தொகுதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது.

விவேகானந்தா கல்லூரி நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் பெற்ற நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இன்றும் 2-வது நாளாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது. 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருச்செங்கோடு அருகே சிறு மொளசியில் கல்லூரியின் தாளாளர் கருணாநிதி வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை மேற்கொண்டுள்ளனர். கல்லூரியின் தாளாளர் கருணாநிதி, அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரையின் உறவினர் எனவும் கூறப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications