BREAKING NEWS: தாய்லாந்து குகையில் சிக்கிய 4 சிறார்கள் பத்திரமாக மீட்பு

கிருஷ்டி ஃபிரைடுகிராம் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று நான்காவது நாளாக சோதனை செய்து வருகிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாய்லாந்தில் குகையில் சிக்கித் தவித்து வரும் 12 இளம் கால்பந்து வீரர்களில் 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மற்ற வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களையும் மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மொத்தம் 4 குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

IT officials raids in Christy Friedgram for the 4th day - LIVE UPDATES

குகையில் 7 கிலோமீட்டர் உள்ள இவர்கள் சிக்கியுள்ளனர். கடந்த 15 நாட்களாக இவர்கள் குகையில் சிக்கித் தவித்து வருகின்றனர். மீட்கப்பட்ட சிறார்கள் நலமுடன் இருப்பதாக தகவல். மீட்கப்பட்ட சிறார்களை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். மீட்புப் பணியையொட்டி ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Jul 08, 2018, 6:29 pm IST

குகைக்குள் நீர் வெகுவாக குறைந்து விட்டதால் மீட்புப் படையினர் நிம்மதி

தண்ணீர் குறைந்ததால் சிறார்கள் மீ்ட்பு விரைவாகியுள்ளது
Jul 08, 2018, 6:26 pm IST

பலவீனமான நிலையில் உள்ள சிறார்களில் முதலில் மீட்பு

ஆஸ்திரேலிய டாக்டரின் ஆலோசனைப்படி மீட்கப்படுகிறார்கள்

Jul 08, 2018, 6:26 pm IST

மீதமுள்ள சிறார்களும், பயிற்சியாளரும் பத்திரமாக மீட்கப்பட்டு குகை நுழை வாயிலை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Jul 08, 2018, 5:49 pm IST

தாய்லாந்து குகையில் சிக்கிய 4 சிறார்கள் மீட்பு

முதலில் 2 சிறார்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் இருவர் மீட்கப்பட்டனர்

4 குழுக்களாகப் பிரிந்து மீட்புப் பணிகள் நடைபெறுகின்றன

Jul 08, 2018, 11:12 am IST

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தருக்கு கொலை மிரட்டல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் அதிமுக-விற்கு எதிராக தீர்ப்பளித்தவர் நீதிபதி சுந்தர்

தீர்ப்புக்கு எதிராக நீதிபதி. சுந்தருக்கு மர்மநபர்கள் கொலைமிரட்டல்

Jul 08, 2018, 10:58 am IST

8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்திய கைதான 63 பேர் விடுதலை
Jul 08, 2018, 10:02 am IST

திருவொற்றியூரில் காதலன் இறந்த துக்கம் தாளாமல் காதலி தற்கொலை

சட்டக்கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

இருவரும் தனிமையில் இருக்கும்போது காதலனுக்கு வலிப்பு ஏற்பட்டு பலி

காதலன் தென்னவன் சென்னை அண்ணாநகரில் ஐஏஎஸ் தேர்வுக்கு படித்து வந்தவர்

Jul 08, 2018, 8:35 am IST

தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

கச்சத்தீவு-நெடுந்தீவு இடையே மீன்பிடிக்கும் போது இலங்கை கடற்படை அத்துமீறல்

Jul 08, 2018, 8:30 am IST

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0ஆக பதிவானது

நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை

Jul 08, 2018, 8:28 am IST

கிறிஸ்டி நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் தொடர் சோதனை

4 ஆம் நாளாக வருமானவரித்துறையினர் சோதனை

திருச்செங்கோடு ஆண்டிப்பாளைய தலைமை அலுவலகத்தில் சோதனை

Jul 08, 2018, 8:27 am IST

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் நகை, பணம் திருட்டு

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் திருட்டு

ரொக்கம்,வைர, தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக தகவல்

ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனதாக ஆயிரம் விளக்கு போலீசில் புகார்

ப.சிதம்பரம் வீட்டினர் வெளியூர் சென்றிருந்த போது திருட்டு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+