சசி குடும்பத்தின் 40 வீடு, நிறுவனங்களில் ஐடி ரெய்டு முடிவு; 150 இடங்களில் 2-வது நாளாக நீடிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா உறவினர்களில் வீடுகளில் நேற்று நடைபெற்ற ஐடி ரெய்டு 150 இடங்களில் இன்றும் தொடருகிறது.

வரி ஏய்ப்பு செய்ததாக சசிகலா உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோர் வீடுகளில் நேற்று வருமான வரித் துறை அதிகாரிகள் 2,000 பேர் சோதனை நடத்தினர்.

சுமார் 190 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனை 40 இடங்களில்தான் நிறைவடைந்தது. 150 இடங்களில் இன்றும் தொடருகிறது.

கருப்பு பணத்துக்கு எதிராக...

கருப்பு பணத்துக்கு எதிராக...

பணமதிப்புழப்பு நடவடிக்கையை தொடர்ந்து கருப்பு பணத்துக்கு எதிராக ஆபரேஷன் கிளீன் பிளாக் மணி என்ற நடவடிக்கையை வருமான வரித் துறையினர் கையில் எடுத்துள்ளனர். இதன் நடவடிக்கையாக சீனி வெட்ஸ் மகி என்ற பெயரில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு திருமண கோஷ்டி போல் 190 வீடுகளுக்கும் ஒரே நேரத்தில் அதிகாரிகள் ஆஜராகினர்.

ரகசிய அறை

ரகசிய அறை

சசிகலா உறவினர்கள் வீடுகளில் நடைபெறும் ரெய்டு குறித்து தினகரன் கூறுகையில் அடையாறில் எந்த சோதனையும் நடைபெறவில்லை. ஆனால் புதுவை பண்ணை வீட்டில் நடைபெறுகிறது. அங்கு என்ன கிடைக்கப் போகிறது. வெறும் சாணியும், உரமும்தான் கிடைக்கும் என்று கிண்டல் செய்தார். இந்நிலையில் அங்கு பாதாள அறை உள்ளதாகவும் அதிலிருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜெ.ஓய்வெடுத்த எஸ்டேட்

ஜெ.ஓய்வெடுத்த எஸ்டேட்

150 இடங்களில் அதிகாரிகளின் சோதனை தொடர்ந்து இன்றும் நடைபெறுகிறது. ஜெயலலிதா ஓய்வெடுக்க பயன்படுத்தப்பட்ட கொடநாடு எஸ்டேட்டில் நேற்று சோதனை நடைபெற்றது. இந்நிலையில் இன்றும் அங்கு சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அங்கு ஏதேனும் முக்கிய ஆவணங்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நண்பர்கள் வீட்டில்

நண்பர்கள் வீட்டில்

நாமக்கல்லில் சசியின் வக்கீல் செந்தில், அவரது நண்பர் சுப்பிரணி வீடுகளில் நேற்று சோதனை நடைபெற்றது. இந்த சோதனை இன்று 2-ஆவது நாளாக நீடிக்கிறது. மேலும் டிடிவி தினகரனின் ஜோதிடர் சந்திரசேகரன் இருக்கும் கடலூரில் திருப்பாதிரிபுலியூரிலும் இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
IT officials continued their raid for 2nd sencond day in Kodanad estate, Diwakaran's house.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற