தினகரனின் பண்ணை வீட்டில் 2 பாதாள அறைகள்: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி அருகே உள்ள டிடிவி தினகரனின் பண்ணை வீட்டில் பாதாள அறைகள் இருந்ததை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஜெயா டிவி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம் என மொத்தம் 190 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை செய்தனர்.

ஜெயா டிவி அலுவலகம், ஜெயா டிவி சிஇஓ விவேக் மற்றும் அவரது சகோதரி கிருஷ்ணப்ரியா வீடுகளில் இன்று 2வது நாளாக சோதனை நடந்து வருகிறது.

தினகரன்

தினகரன்

புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் பொம்மையார்பாளையத்தில் இருக்கும் டிடிவி தினகரனின் பண்ணை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனை

சோதனை

10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பண்ணை வீட்டில் 7 அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த வீட்டில் மன்னார்குடியை சேர்ந்த 4 தொழிலாளர்கள் மட்டுமே இருந்தார்கள்.

பாஸ்வேர்டு

பாஸ்வேர்டு

சோதனையில் பண்ணை வீட்டின் கீழ் தளத்தில் இரண்டு பாதாள அறைகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த அறைகளை திறக்க பாஸ்வேர்டு தேவைப்பட்டதால் உடனே திறக்க முடியவில்லை.

பறிமுதல்

பறிமுதல்

பாதாள அறைகளில் ஏராளமான ஆவணங்கள் இருந்ததாகவும் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. காலை 7 மணி முதல் இரவு 9.30 மணி வரை அங்கு சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
IT officials have reportedly confiscated some important documents from two secret rooms in TTV Dinakaran's farm house on thursday.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற