மனித சங்கிலி, கோட்டை முற்றுகை... அரசுக்கு எதிராக போராடத் தயாராகும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு
சென்னை: அரசு ஊழியர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், பிப்ரவரி 20ம் தேதி மனிதச்சங்கிலி போராட்டமும், 25ம் தேதி கோட்டையை நோக்கி லட்சக்கணக்கானோர் பேரணியாக சென்று மறியல் போராட்டமும் நடத்த தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ( ஜாக்டோ) முடிவு செய்துள்ளது. கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் 26ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகவும் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்து உள்ளது.
ஏழாவது ஊதியக் குழுவின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) சார்பில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பலகட்ட போராட்டங்கள் நடந்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் மாநிலம் முழுவதும் 3 நாட்கள் தொடர் மறியல் போராட்டம் நடந்தது. தொடர்ந்து கடந்த 9ம் தேதி நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் நடந்த பேச்சுவார்த்தையிலும் எந்த சுமுக முடிவும் எட்டப்படவில்லை. இருந்தாலும், இடைக்கால பட்ஜெட்டில் தமிழக அரசு ஒரு சுமுக முடிவை எடுக்கும் என்று எதிர்ப்பார்ப்புடன் இருந்த ஆசிரியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனால் மீண்டும் போராட்டத்தை தொடர்வது என்று ஜாக்டோ முடிவு செய்துள்ளது.

ஜாக்டோ போராட்ட அறிவிப்பு
தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) சார்பில் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் ஜாக்டோ அமைப்பில் உள்ள அனைத்து ஆசிரியர் சங்க தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் கலந்துகொண்டனர். கூட்ட முடிவில் ஜாக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினர் என்.ரெங்கராஜன் செய்தியாளர்களிடம் பேசினார்.

மனிதச்சங்கிலி
இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலைபட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் 6-வது ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகளை களையவேண்டும். பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் 20ந்தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது.

கோட்டைக்கு ஊர்வலம்
25ம்தேதி சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் இருந்து ஊர்வலமாக கோட்டைக்கு சென்று மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. 25ம் தேதி போராட்டம் நடைபெற்ற பிறகும் எங்கள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால், 26ம் தேதி முதல் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.

தேர்தலை புறக்கணிப்போம்
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகளில் ஆசிரியர்கள் வருடம் முழுவதும் ஈடுபடுகிறார்கள். தேர்தல் பணிகளுக்காக ஆசிரியர்களை ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு அனுப்பக் கூடாது. அவ்வாறு அனுப்பினால் தேர்தலை புறக்கணிப்போம் என்றும் ஜாக்டோ அமைப்பினர் கூறியுள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications