'முகத்தை மூடியபடி' மெரினா போர்க்களத்தில் அட்டென்டென்ஸ் போட்ட நடிகர் விஜய்
சென்னை மெரினாவில் தொடரும் ஜல்லிக்கட்டு புரட்சியில் முகத்தை மூடியபடி நடிகர் விஜய் கலந்து கொண்டார். நடிகர் விஜய் கலந்து கொண்டபோதும் அவரை யாரும் பொருட்படுத்தவும் இல்லை.
சென்னை: ஜல்லிக்கட்டு எனும் தமிழின பண்பாட்டு உரிமையை மீட்க இளைஞர்களும் மாணவர்களும் நடத்தி வரும் வரலாறு படைக்கும் யுக புரட்சியால் மக்கள் நலனைப் பேசுவதாக வேடம் போட்ட அரசியல்வாதிகளும் பிரபலங்களும் அதிர்ந்து போய் உறைந்து கிடக்கிறார்கள். அதே நேரத்தில் இரவும் பகலும் பாராமல் நடிகர் லாரன்ஸ் போன்றவர்கள் ஜல்லிக்கட்டு புரட்சியில் கைகோர்த்தும் இருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் விஜய் திடீரென இன்று அதிகாலை சென்னை மெரினா போர்க்களத்துக்கு 'முகத்தை மூடியபடி' வந்து சிறிதுநேரம் இருந்துவிட்டு போயிருக்கிறார்.

"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே"
என்பது புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் வரிகள்.. ஆனால் இது கவிதையல்ல.. சென்னை மெரினா கடற்கரை தொடங்கி தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் நடக்கும் பண்பாட்டு உரிமை மீட்புக்கான வரலாற்று புரட்சி இந்த வரிகளை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
மக்களுக்காக நாங்கள் என மாய்மாலம் காட்டிவந்த தமிழகத்து அரசியல்வாதிகள் வீடுகளுக்கு முடங்கிக் கிடக்கிறார்கள்; அய்யயோ எதிர்காலம் பறிபோகிறதே என அலறும் அரசியல்வாதிகள் நாள்தோறும் போராட்டம், உண்ணாவிரதம் என தாம்தூம் காட்டுகிறார்கள்.
'முகத்தை மூடியபடி' மெரினா போர்க்களத்துக்கு வந்து போன நடிகர் #விஜய் #Vijay #jallikattu #TNJALLIKATTU pic.twitter.com/nfp1yTdVkw
— Oneindia Tamil (@thatsTamil) January 21, 2017
சினிமா அடிமை மோகிகளாக விமர்சிக்கப்பட்ட மாணவர், இளைஞர் பட்டாளம் தமிழினத்தின் உரிமை மீட்புக்கான தியாக வேள்வியில் களமாடுவது கண்டு கலையுலகம் கதிகலங்கிப் போயுள்ளது. இதோ நாங்களும் உங்களுடன் என்கிறது 'கலைக்குடும்பம்'... நேற்று வரை பாலபிஷேகம் செய்த பட்டாளமோ, நீங்கள் ஒன்றும் எங்களுக்கு வேண்டாம் என சட்டென தூக்கி எறிந்துவிட்டது.
இருந்தபோதும் நடிகர் லாரன்ஸ் போன்ற தமிழ் உணர்வுமிக்க, மாந்த நேயமுள்ள ஒரு சில கலைஞர்களை இளைஞர் பட்டாளம் உச்சிமோந்து அனுமதித்துக் கொண்டிருக்கிறது. இந்த புரட்சி ஜோதியில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள துடியாய் துடிக்கிறது அரசியல், கலை உலகம்; ஆனால் நீங்கள் யாருமே வேண்டாம்.. ஒதுங்கிப் போய்விடுங்கள் என எச்சரிக்கை கொடுத்து கொண்டே இருக்கிறது இளைஞர் பெரும்படை.
இந்த நிலையில் நடிகர் விஜய் இன்று அதிகாலை சென்னை மெரினா போர்க்களத்துக்கு வந்தார். ஆனால் எங்கே தாம் திருப்பி அனுப்பப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தில் முகத்தை துணியால் மூடியபடி பத்தோடு பதினொன்றாக சிறிதுநேரம் நின்றுவிட்டு "உள்ளேன் ஐயா" என அட்டென்டென்ஸ் போட்டுவிட்டு புறப்பட்டார் விஜய்.
ஆனால் நேற்று நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர் விஜய் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஜய்க்கு அடுத்த அக்னி பரீட்சை.. அமைச்சர்களுக்கு முக்கிய அசைன்மென்ட்! இடைத் தேர்தலுக்கு ரெடியான தவெக -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
விஜய் தவெகவின் ‘வெற்றி டிவி’? டெல்லியில் டிரேடுமார்க் விண்ணப்பம்! களமிறக்கப்படும் பிரம்மாண்ட திட்டம் -
இரக்கமே காட்டாதீங்க.. கேஸை போடுங்க.. திமுக மாஜி அமைச்சர்களுக்கு விஜய் செக்.. வரிசையாக ஆக்சன் -
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் விஜய்யின் தவெகவுக்கு அழைப்பு இல்லையா? பின்னணி தகவல் -
“வல்லாரை கீரை சாப்பிடுங்க விஜய்”.. முதல்வருக்கு தபாலில் அனுப்ப வந்த 3 பேர் கைது! -
"எனக்கு சினிமாவில் ஒரே நண்பன் விஜய் தான்!"... அவர் மகன் பற்றி சொன்ன விஷயம்.. ராகவா லாரன்ஸ் ஓபன் -
விஜய் அதிரடி.. தமிழக தனியார் பள்ளிகளுக்கு ₹3 லட்சம் அங்கீகார கட்டணம் ரத்தா? உண்மை என்ன? -
கள்ளச் சாராயத்தை ஒழிக்க விஜய் போட்ட மெகா பிளான்.. நேரடியாக களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்!












Click it and Unblock the Notifications