நம்பிக்கையோடு இருந்தோம்.. இன்னும் ஜல்லிக்கட்டுக்கு சாதகமான பதில் வரவில்லை.. ஓபிஎஸ் !
ஜல்லிக்கட்டு தொடர்பாக இன்னும் சாதகமான பதில் வரவில்லை என முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு நடக்கும் என நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் இன்னும் சாதகமான பதில் வரவில்லை என முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆந்திர தலைநகர் அமராவதிக்கு சென்றார். அங்கு அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து 2.5 டிஎம்சி தண்ணீர் வழங்க ஆந்திர அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆந்திர சென்ற முதல்வர் பன்னீர்செல்வம் இன்று இரவு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது முதல்வர் பன்னீர்செல்வம் கூறியதாவது: சென்னையின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தமிழகம் சார்பில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதினேன். அதனை தொடர்ந்து கிருஷ்ணா நதிநீர் மூலம் நமக்கு வரவேண்டிய தண்ணீரை திறந்துவிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து தமிழகத்துக்கு கூடுதல் நீர் தருமாறு வலியுறுத்தினேன். தமிழகத்தின் கோரிக்கையை பரிசீலிப்பதாக அவர் கூறியுள்ளார் என்றார். அப்போது ஜல்லிக்கட்டு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ஜல்லிக்கட்டு நடக்கும் என நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் இன்னும் சாதகமான பதில் வரவில்லை என முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications