ஜல்லிக்கட்டுக்காக ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் உண்ணாவிரதம்
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்ற கோரி திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்ற கோரி திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
உண்ணாவிரதம் தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் , ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று முதல்வர் கூறியிருப்பது இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.

அவசரச் சட்டத்தை முன்கூட்டியே மாநில அரசோ அல்லது மத்திய அரசோ கொண்டு வந்திருந்தால் பொங்கல் அன்றே ஐல்லிக்கட்டு நடைபெற்றிருக்கும். எனினும், இனியும் காலதாமதமின்றி உடனே ஜல்லிக்கட்டு நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்ய வேண்டும். மேலும், இனி எந்த வகையிலும் ஜல்லிக்கட்டு தடைபடாத வகையில், காளைகளை மத்திய அரசும் அதன் அறிவிக்கையில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
வாடிவாசலில் காளை மாடுகள் அவிழ்த்து விடப்படும் வரை இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்துக்கு திமுக தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 8 மணிக்கு ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்காக நேற்று ரயில் மறியல் போராட்டம் நடத்தியது திமுக, இதற்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் பலரும் அதிருப்தி தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தை திமுகவினர் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications