For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விருதுநகரில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்த காளைகள்!

விருதுநகர் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடிவீரர்கள் உற்சாகமாக அடக்கினர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நெடுங்குளம் ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்த காளைகள்!- வீடியோ

    விருதுநகர் : தமிழர் திருநாளை நினைவு கூறும் வகையில் விருதுநகரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் காளைகளை அடக்கி பரிசுகளை அள்ளிச் சென்றனர்.

    தமிழர் திருநாளை நினைவு கூறும் வகையில் பல்வேறு பகுதிகளில் ஜல்லி கட்டு போட்டி நடந்து வருகிறது. விருதுநகர் அருகே உள்ள கூமாபட்டியை அடுத்த நெடுங்குளத்தில், ஊர் சமுதாய மக்கள் சார்பில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஜல்லிக்கட்டில் 300 காளைகள் அவிழ்த்து விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தன.

    Jallikattu sports turns as a celebration at Virudhunagar district

    சந்திரபிரபா எம்.எல்.ஏ. ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். வாடிவாசல் வழியே ஒவ்வொரு மாடாக அவிழ்த்து விடப்பட, அதனை 150-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் பாய்ந்து பிடித்தனர். சில காளைகள் சீறிப்பாய்ந்து வீரர்களை திக்குமுக்காடச் செய்தன.

    இருப்பினும் வீரர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு காளைகளை மடக்கிப்பிடித்து பரிசுகளை வென்றனர். காளைகள் குத்தியதில் 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு நடைபெற்றதையொட்டி, போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    English summary
    The sport synonymous with Pongal festivities was held in Virudhunagar more than 300 bulls participated in it and 150 bull fighters happily participated in the event and won prizes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X