8 மாவட்டங்களுக்கு புதிய மா.செக்கள்.. ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: எட்டு மாவட்டங்களுக்குப் புதிய மாவட்டச் செயலாளர்களை அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் அறிக்கை:

எந்தெந்த மாவட்டங்கள்
காஞ்சீபுரம் மத்தியம், திருவள்ளூர் வடக்கு, வேலூர் புறநகர் கிழக்கு, கிருஷ்ணகிரி, திருப்பூர் புறநகர், கோவை மாநகர், கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு ஆகிய மாவட்டங்களின், மாவட்ட கழக செயலாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள்.

காஞ்சிபுரத்திற்கு சி.வி.என். குமாரசாமி
காஞ்சீபுரம் மத்திய மாவட்ட அ.தி.மு.க.செயலாளராக சி.வி.என்.குமாரசாமி (செங்கல்பட்டு நகர கழக செயலாளர்), திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளராக சிறுணியம் பி.பலராமன் (பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) நியமிக்கப்படுகின்றனர்.

வேலூருக்கு என்.ஜி. பார்த்திபன்
வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக என்.ஜி.பார்த்திபன் (சோளிங்கர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்), கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளராக வி.கோவிந்தராஜ் (மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை செயலாளர், கிருஷ்ணகிரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) நியமிக்கப்படுகின்றனர்.

திருப்பூருக்கு பொள்ளாச்சி ஜெயராமன்
திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளராக பொள்ளாச்சி வி.ஜெயராமன் (அ.தி.மு.க.தேர்தல் பிரிவு செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை துணை தலைவர்), கோவை மாநகர் மாவட்ட செயலாளராக கணபதி ப.ராஜ்குமார் (வடக்கு மண்டல குழு தலைவர்) நியமிக்கப்படுகின்றனர்.

மீண்டும் தளவாய் சுந்தரம்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக என்.தளவாய்சுந்தரம் (முன்னாள் அமைச்சர்), கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளராக டி.ஜெங்கின்ஸ் (மாவட்ட இலக்கிய அணி செயலாளர், குமாரபுரம் பேரூராட்சி கழக செயலாளர், பேரூராட்சி மன்ற 6-வது வார்டு உறுப்பினர்) ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். அ.தி.மு.க.வினர் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
-
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா!












Click it and Unblock the Notifications